headlines

img

கோயம்பேடு நோய்த்தொற்று மையமாக அரசே காரணம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலா கப் பேசியபோது ”கோயம்பேட்டில் கொரோனா தீவிரமடைந்ததற்கு வணிகர்களும், மக்களும் அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காததே காரணம்” என்று கூறியிருந்தார். 

கொரோனா பரவாமல் செய்ய போதிய நடவ டிக்கைகளை முன்கூட்டியே எடுக்காமல் இருந்து விட்டு, கோயம்பேடு சந்தையை இடம் மாற்ற வணிகர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என முதல் வர் கூறுவது வியப்பாக உள்ளது. கோயம்பேடு சந்தை இயங்கியபோது நாள்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் வெளிமாநில லாரி ஓட்டுநர்களும் கூலித்தொழிலாளர்களும் பொதுமக்களும் புழங்கும் இடமாக இருந்தது. 

கொரோனா தொற்று இந்தியாவிற்குள் வந்தவு டன் பொதுமக்கள் புழங்குவதைத் தடுக்க ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்த ரவை கண்காணிக்கவேண்டியது அரசும் காவல் துறையும்தான். கோயம்பேடு சந்தை ஊரடங்கு காலத்திலும் வழக்கம்போல் செயல்பட்டது. அங்கு ஏராளமாக வியாபாரிகளும் பொது மக்களும் முகக்கவசம் இல்லாமல் சென்று வந்தனர். வெளிமாநிலங்களிலிருந்து குறிப்பாக நாட்டில் நோய்த்தொற்று அதிகமாக உள்ள மகா ராஷ்டிரா மாநிலத்திலிருந்து நாள்தோறும் திராட்சை, மாதுளம் உள்ளிட்ட பழங்களை ஏற்றிக் கொண்டு லாரிகள் வந்து சென்றன. 

இங்கு நோய்த்தொற்றைத் தடுக்க காவல் துறையும் சந்தைக்குப் பொறுப்பான சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும நிர்வாகமும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தி ருக்கவேண்டும். எடுக்காமல் வேடிக்கை பார்த்தன. தனிமனித இடைவெளியில் வியாபாரம் நடை பெறுவதை உறுதிப்படுத்தவில்லை. நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்ற பிறகு அரசு அலறி யது. அதற்குள் சந்தைக்கு வந்தவர்கள் பல மாவட் டங்களுக்கு சென்றுவிட்டனர். போகும்போது நோய்த்தொற்றையும் சுமந்துசென்றனர். 

முதல்வர் கூற்றுப்படி வியாபாரிகள் நடந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களிடம் கண்டிப்புடன் பேசி நோய்த் தடுப்பு நடவடிக்கை யின் அவசியத்தை எடுத்துரைத்திருக்கலாம். சந்தைக்கு நாள்தோறும் வந்து செல்பவர்களை  கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க லாம். தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தபோது ஒரு வாரம் கோயம்பேடு சந்தை உட்பட அனைத் துக் கடைகளையும் அடைக்க வியாபாரிகள் ஒப்புக் கொண்டனர். ஆனால், மக்களுக்கு அத்தியா வசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அவற்றை அடைக்கக் கூடாது எனத் தமிழக அரசு கூறியது.

நோய்த்தொற்றுக்கு வியாபாரிகள் ஒருபோ தும் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. இந்தத் தொற்று  ஏற்பட்டபோதிலும், உயிரைத் துச்சமென மதித்து, மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப் பாடு இல்லாமல் வணிகர்கள் பார்த்துக்கொண்ட னர். இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமலி ருந்த அரசுதான் இந்த நோய் பரவலுக்கு காரணம். 

;