headlines

img

காற்றில் வெண்ணெய் எடுக்கும் கலை....

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  சிறப்பு பொருளாதாரத் திட்டம் என்ற பெயரில்தவணை முறையில் அவ்வப்போது பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். வியாழனன்று அவர் அறிவித்த திட்டங்களில் ஒன்று வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய திட்டம் என்பதாகும். 

புதிய திட்டம் என்பதால் அரசு சார்பில் ஏதோ வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற  முதலீட்டுதிட்டம், தொழில் தொடங்கும் திட்டம் என்றுஎண்ணிவிடக்கூடாது. அதிக வேலை வாய்ப்புகளைஉருவாக்கும் வகையில் திட்டத்தை அறிவித்ததாக கூறினாலும் அவர் சொன்னது என்னவோ தனியார் நிறுவனம் வேலைவாய்ப்புவழங்கிடும் என்ற வாய்ப்பந்தல்தான். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஆட்களை சேர்க்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கப்படும். அந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்து ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் பெறும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியை மத்திய அரசே செலுத்தும். இது அடுத்தாண்டு ஜூன் வரை செயல்படுத்தப்படும் என்பதுதான் மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பாகும்.இதில் வேலைகளின் தன்மை பற்றியோ, எண்ணிக்கைப் பற்றியோ எந்தவிதமான குறிப்பும்இல்லை. யாரோ ஒருவர் நிறுவனம் தொடங்கி ஆட்களை சேர்த்து வேலை தருவாராம். அதுவும்15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவாராம். அதற்கு இவர்கள் வருங்கால வைப்பு நிதி முழுவதையும் வழங்குவார்களாம். எப்படி இருக்கிறது இவர்களது புதிய வேலை வாய்ப்பு திட்டம். காற்றில்வெண்ணெய் எடுப்பது என்பது இதுதான் போலும்.

மத்திய அரசு படாடோபமாக ஆத்ம நிர்பார்பாரத் ரோஜ்கார் யோஜனா என்று இந்த திட்டத்திற்கு பெயர் சொல்லிக் கொண்டாலும் கொரோனாநோய் தொற்றினாலும், மத்திய ஆட்சியின் கொள்கைகளாலும் ஏற்கெனவே வேலை இழந்தவர்களுக்கோ அல்லது புதிதாக வேலை வாய்ப்புபெறுபவர்களுக்கோ இந்தத் திட்டம் பயனளிக்கும் என்று சொல்லிக் கொண்டாலும் விளைவுஎதுவும் இல்லை என்பதுதான். அதைத்தான் இப்படி மறைமுகமாக புதிய வேலை வாய்ப்பு என்று நம் காதில் பூச் சுற்றுகிறார்கள். 
இவர்களது பழக்கமே சொல்வது எதையும் செய்வதில்லை என்பதுதானே. பிரதமர் மோடி கடந்த ஆட்சி காலத்திற்கு முன்பாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியான ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலை வழங்குவோம் என்பதன் கதி என்னாயிற்று என்பதை நாடு அறிந்ததுதானே. அதைப்போலவே தற்போது தொழிலாளர் நலசட்டங்களையெல்லாம் ஒழித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களாக சுருக்கி வைத்து வேலை வாய்ப்புகளையும், பாதுகாப்பையும் நாசமாக்கி விட்டார்கள். 

பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக்கட்டும், தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கைவிட வைப்பதற்காகவே இந்தியாவில் அனைத்து தொழிற்சங்கங்களும் வரும் 26 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில்ஈடுபடவிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் ஆலயங்கள் என்று சொன்னமுதல் பிரதமர் நேருவின் வார்த்தைகளை கனவிலும் கூட நினைத்துப் பார்க்காத ஆட்சியாளர்களுக்கு தொழிலாளர்கள் பாடம் புகட்டுவார்கள். 

;