headlines

img

அரசே தனியார்மயமாகிறது

 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது ஒருபுறமிருக்க அரசாங்கத் தையே தனியார்மயமாக்க மோடி தலைமை யிலான பாஜக அரசு முடிவு செய்திருக்கிறதோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அரசுத் துறையில் புதிய திறன்களை கொண்டு வரும் வகையிலும் மனித சக்தியை அதிகரிக்கும் வகை யிலும் தனியார் துறையை சேர்ந்த 40 நிபுணர்கள் மத்திய அரசின் இடை நிலை மற்றும் உயர் பதவிகளில் நியமிக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.  ஏதோ அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் திறன் குறைந்த நிறுவனங்கள் போல வும் தனியார் துறையினர் வந்துதான் அதன் திறனை உயர்த்தப்போவது போலவும் இருக்கிறது மத்திய அரசின் நடவடிக்கை. நாட்டில் உள்ள மிகப்பெரிய அடிப்படை கட்டமைப்பு நிறுவ னங்கள் அனைத்தும் அரசுத்துறையை சேர்ந்தவை தான். சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் பொரு ளாதாரம் வளர பொதுத்துறை நிறுவனங்களே அடித்தளமிட்டன. நவரத்தினங்கள் என்ற ழைக்கக்கூடிய அந்த நிறுவனங்களின் சாதனை களை கேவலப்படுத்தும் வகையில் அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. 2வது முறையாக மத்தியில் பொறுப்பேற் றுள்ள மோடி தலைமையிலான அரசு பல அர சுத்துறைகளை கபளீகரம் செய்ய துணிந்து விட்டது. உலகிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை பல துண்டு களாக வெட்டி தனியாருக்கு பங்குபோட திட்ட மிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நாடு முழு வதும் செயல்பட்டு வந்த ரயில்வே அச்சகங்கள் மூடப்பட்டன.  அடுத்த கட்டமாக சென்னை பெரம்பூர், பஞ்சாப் மாநிலம் கபூர்தலா, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் மேற்கு வங்கமாநிலத்தில் உள்ள சித்தரஞ்சன் லோகோ மோடிவ் தயாரிப்பு ஆலையை தனியார்மய மாக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை துரிதப் படுத்தியுள்ளது. இதற்கு எதிராக சித்தரஞ்சன் ஆலைத் தொழிலாளர்கள் கடந்தவாரம் ஆலை வளாகத்திலேயே மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது தனியார் மயத்தை ஒப்புக்கொண்ட அத்துறைக்கான அமைச்சர் பியூஷ் கோயல் இதனால் பணி யிழக்கும் தொழிலாளர்களுக்கு வேறு வேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் அது உண்மையல்ல, பெரும்பாலான தொழிலாளர்க ளை விருப்ப ஒய்வு என்ற பெயரில் கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பப்போகிறார்கள். அப்படியே அந்த பணியிடங்கள் காலியானாலும்அதில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை நிரப்பாமல் காண்ட் ராக்ட் அடிப்படையில் ஆட்களை நியமிக்கவுள்ளனர். இதை ஒருபோதும் ஏற்கமுடியாது. தனியார்மயத்தை நோக்கி அரசு பயணித் தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும். எனவே எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கையை பாட மாக கருதி அரசு தனது நடவடிக்கையில் இருந்து பின்வாங்க வேண்டும். அரசுத்துறைகள் லாபகரமா கவும் திறமையாகவும் செயல்பட ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது அரசின் கடமையாகும்.

;