headlines

img

விரியும் சிலந்தி வலை!

 சேலம்-சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டம், சேலத்தை தாண்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி வரை இணைக்கப்படும். தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்களுடன் இணைக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிக முக்கியத் திட்டம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியிருக்கிறார். எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு விவசாயி களிடம் நிலம் கையகப்படுத்தியதில் தவறுகள் நடைபெற்றிருக்கின்றன எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் இத்திட்டத்திற்குத் தடை விதித்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. உச்சநீதி மன்றமும், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த  தடையை நீக்க மறுத்துவிட்டது. நிலங்களை கையகப்படுத்தியதில் தவறுகள், முறைகேடுகள் நடைபெற்றதை உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டியது. என்றாலும் மக்கள் எதிர்ப்பு, நீதிமன்றத் தடை இத்தனைக்கும் பிறகு விவசாயிகளை “புரிய வைத்து” இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கூறியிருந்தார். இதன் மூலம் தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள், மத்திய ஆட்சியாளர்களின் இந்த மோசமான திட்டத்தை நிறைவேற்றுவதில் பிடிவாதமாக இருப்பதை காண முடிகிறது. சேலத்துடன் இந்த எட்டுவழிச்சாலை திட்டம் முடிய போவதில்லை. அடுத்தடுத்து தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களையும், ரயில்வே, துறை முக, விமான போக்குவரத்து முனையங்களுடன் இணைக்கப்படும் என்பது ஒரு மிகப் பெரிய சிலந்தி வலைப் பின்னலாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக என இவர்கள் சொல்வது உண்மையில் கார்ப்பரேட்டு கள் நலனுக்கு என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் பல பகுதிகளில் இருக்கும் கனிம வளங்களை, இயற்கை ஆதார வளங்களை  பன்னாட்டு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்காக, கபளீகரம் செய்வதற்கு உரிய திட்டமாகவே இந்த விரிவான வலைப்பின்னல் கட்ட முயற்சிக்கின்றனர் என்பது தெரிகிறது. இத்தகைய மிகப்பெரும் லாப வேட்டை நோக்கத்தின் பின்புலத்துடன் தான் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் எட்டு வழிச்சாலை அமைப்ப தில் மூர்க்கத்தனமான பிடிவாதம் கொண்டுள்ள னர் என்பதை உணரலாம். ஏதோ ஒரு வகையில் சேலம்- சென்னை எட்டு வழிச்சாலைத்திட் டத்தை நிறைவேற்றி முடித்தால், அதையே மாதிரி யாகக் கொண்டு தமிழகம் முழுவதும் ஆக்டோ பஸ் கரத்தை விரிப்பார்கள் என்பது உறுதி. எனவே சேலம் எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான எதிர்ப்பு என்பது தனியான ஒரு போராட்டமாக இருக்க முடியாது. ஒட்டுமொத்த தமிழக மக்களின், விவசாயிகளின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாப்பதற்கான ஒன்றுபட்ட, விரிவான ஒற்றுமையின் ஒரு பகுதியாகவே அது இருக்க முடியும். எனவே தமிழகத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகள, உழைப்பாளர் மக்களின் வலுவான ஒற்றுமை, சக்திமிக்க போராட்டத்தின் மூலமே இந்த கார்ப்பரேட் சிலந்தி வலையை கிழித்தெறிய முடியும். 

;