headlines

img

தில்லி வன்முறைக்கு காவல்துறையே உடந்தை!

குடியுரிமை திருத்தச்சட்டத்தை ஆதரித்துப் பேரணி என்ற பெயரில் தலைநகர் தில்லியில் பாஜகவினர் நடத்திய வன்முறை  குறித்து புதிய புதிய தகவல்கள் நாள்தோறும் வந்து கொண்டி ருக்கின்றன. திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்த வன்முறையின் போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 3 பேர் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டனர். என்.டி.டி.வி ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற் றும் அரவிந்த் குணசேகரனும்,  ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு  24 மணிநேர செய்தி அலை வரிசையின் செய்தியாளரும் துப்பாக்கிச்சூட்டினால் படுகாய மடைந்தனர். பெண் பத்திரிகையாளர் ஒருவரையும் வன்முறைக் கும்பல் வெறிகொண்டு தாக்கியது. 

காவல்துறையினர் கையில் இருக்கவேண்டிய துப்பாக்கிகள் வன்முறையாளர்களிடம் இருந்தது. காவல்துறையினர் மட்டுமல்லாமல் பாஜக கும்பல் ஒன்றும்  துப்பாக்கியால் சுட்டதால்தான் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணம் என்று செய்தி கள் வந்துள்ளன. இதனைத் திட்டமிட்டே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவரது கட்டுப் பாட்டில் உள்ள டில்லி காவல்துறை ஆணையரும் மறைக்கிறார்கள். பாஜகவினர் நடத்திய வன்முறை நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப் படும் என்பதால் பத்திரிகையாளர்கள் அதைப் படம் பிடிக்கும் போது சாட்சியத்தை கலைப்பதைப்போல் அவர்களைத் தாக்குவதோடு கேமராக்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். 

வியாழனன்று வெளியான மற்றொரு வீடியோ அதிர்ச்சியளிக்கிறது. அமித்ஷா கட்டுப்பாட் டில் உள்ள தில்லி காவல்துறை வன்முறையாளர்க ளைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. சிறுபான்மையின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கடைகள் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபடும்போது அங்கிருந்த கேமராக்களில் காட்சிகள் பதிவாகும் என்பதால் அதை காவல் துறையினர் உடைத்து நொறுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொ டங்கியது முதல் இன்றுவரை தில்லி காவல்துறை யினர் பாஜகவின் அடியாட்கள் போல் நடந்து கொள்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினரும் மாணவர்களும் தெரிவித்த குற்றச்சாட்டு உறுதி யாகி விட்டது.

தில்லி காவல்துறையின் ஒரு பகுதியினர் மத ரீதியில் செயல்படுகிறார்களோ என்ற அச்சத்தை  இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன. இது ஆபத்தானது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் இடத்தின் அருகே ஆதரவுப் போராட்டம் நடத்த அனுமதி அளித்தது ஏன்? வன்முறை நிகழும் என்று முன் கூட்டியே உளவுத்துறையினர் எச்சரித்திருந்த போதும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியது ஏன்? வன்முறை தொடங்கிய பின்னர் உதவி கேட்டு பொதுமக்கள் தொலைபேசியில் அழைத்த போது காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் உடனடியாக வராதது ஏன்?  என அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கு மோடியும் அமித்ஷாவும் பதில் சொல்ல வேண்டும்.

;