headlines

img

ஒரே நாடு, ஒரே ஆட்சி?

 ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற வரிசையில் தற்போது ஒரே நாடு, ஒரே கட்சி ஆட்சி என்கிற அறி விக்கப்படாத முழக்கத்தை மத்திய ஆளுங் கட்சி யான பாசிச எண்ணம் கொண்ட பாஜக, தற்போது நாடு முழுவதும் உள்ள மற்ற கட்சிகளின் ஆட்சி களை கவிழ்த்து தங்கள் கட்சியே ஆள வேண்டும் என்ற வெறியுடன் தீவிர ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.  அண்மைக்காலமாக கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்க ளை பதவி ஆசைகாட்டியும் பண ஆசைகாட்டி யும் அரசின் கைக்கருவியான சிபிஐ, வருமான வரித்துறை போன்றவை மூலம் மிரட்டியும் பாஜக தங்களது கட்சிக்கு ஆள் பிடித்து வருகிறது.  கடந்த 2018ல் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் மூன்றே நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா கர்நா டகத்தில் மீண்டும் எப்பாடுபட்டாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட துடிக்கிறார். மத்திய ஆட்சியாளர்கள் அவருக்கு துணையாக ‘ஆப் ரேசன் கமலா’ திட்டத்தை நிறைவேற்றும் காரி யத்தில் இறங்கியுள்ளனர்.  பாசிசக் கொள்கை கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் பாஜக இந்திய நாட்டில் இந்துத்துவா கொள்கையை திணிப்பதற்காக ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டு வருவதற்கு எத்தனிக்கிறது. அதனாலேயே நாட்டில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று முனைந்திருக்கிறது.  

அந்த எண்ணத்திலேயே தேர்தலுக்கு முன்பே பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசின் நாற்பது எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று பகிரங்க மாக கூறினார். தற்போது பாஜகவின் தலைவராக உள்ள முந்தைய திரிணாமுல்காரர்  முகுல்ராய் திரி ணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளைச் சேர்ந்த 107 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.  பாஜகவுக்கு வெறும் ஆறு எம்எல்ஏக்கள் மட்டுமே கொண்ட மாநிலத்தில் தன் கட்சி ஆட்சிய மைப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்றால் அவர்களது ‘ஜனநாயக எண்ணம்’ எத்தகையது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும். இது தான் பாசிசக் கொள்கையின் ஆக்கிரமிப்பு அடாவடி அரசியலுக்கு எடுத்துக்காட்டாகும்.  ஆந்திராவில் புதிதாக ஆட்சிப் பொறுப் பேற்ற போது ஜெகன் மோகன் ரெட்டியை வாழ்த்தி விட்டு அப்போதே ஆந்திராவில் பாஜக விரைவில் ஆட்சியமைக்கும் என்று பிரதமர் மோடி கூறியி ருந்தது அந்தக் கட்சியின் அதிகார வெறி மற்றும் ஜனநாயக விரோத பாசிச எண்ணத்தையே வெளிப்படுத்தியது என்பது நினைவுகூரத்தக்கது.  தங்கள் கட்சி மட்டுமே மத்தியிலும் மாநி லங்களிலும் ஆட்சியமைக்க தேர்தல்களில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று ஆள் பிடிக்கும் காரியத்தில் ஈடுபடுவதை ஜனநாயக எண்ணம் கொண்ட கட்சிகள் அனைத்தும் ஒன்றி ணைந்து எதிர்த்து முறியடித்திட வேண்டும்.

;