headlines

img

அதுவுமில்லை அவர்களுக்கு...

கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டியாக வசூலித்த தொகையை நிதி நிறுவனங்கள் வரும் 5ஆம் தேதிக்குள் கடன் பெற்றவர்கள் கணக்கில் திரும்பச் செலுத்த வேண்டுமென ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதற்காக உச்சநீதிமன்றத்தில் வங்கியின் சார்பில் பிரமாண பத்திரம் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த வட்டி மீதான கூட்டு வட்டிதள்ளுபடி வசதியை விவசாயிகள் பெற முடியாது.ஏனெனில் மத்திய அரசு அறிவித்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிப்பு வேளாண்மைமற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு கடன் பெற்றவர்களுக்கு பொருந்தாது என்று கூறியிருந்ததை அண்மையில் மத்திய நிதியமைச்சகம் சுட்டிக்காட்டியது. 

வட்டிக்கு வட்டி தள்ளுபடி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள எட்டு பிரிவுகளில் வேளாண் கடன்ஒரு அங்கமாக இடம் பெறாது என்றும் எனவே பயிர்க்கடன், டிராக்டர் கடன் உள்ளிட்டவற்றுக்கு வாங்கப்பட்ட கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்றும் மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியிருந்தது. ஆனால் பிப்ரவரி 29 நிலவரப்படி கிரெடிட்கார்டு நிலுவை வைத்துள்ள கடன்தாரர்களுக்கு இந்த கூட்டுவட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 2 கோடி வரையில் கடன் பெற்றுஆறுமாத கடன் தவணை ஒத்தி வைப்பு சலுகையைபெற்றவர்கள் மற்றும் அந்த சலுகையை தேர்வுசெய்யாதவர்கள் என அனைவருக்கும் கூட்டு வட்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்தியஅரசாங்கம் உச்சநீதிமன்றத்திடம் உறுதியளித்திருந்தது.

இந்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை கூடவிவசாயிகளுக்கு வழங்கப்படாது என்று மத்தியஅரசாங்கம் அறிவித்ததன் பின்னணி என்னவாக இருக்கும்? அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம். அல்லது விவசாயப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் புலனாய்வு செய்து கண்டுபிடித்திருக்கலாம். மேலும் விவசாயிகளின் விளை பொருட்கள் சந்தைகளில் மிக தாராளமாக விற்பனை செய்யப்பட்டு ஏராளமான லாபமடைந்திருக்கலாம் என்று கூட மத்திய அரசும்நிதி அமைச்சகமும் கணக்கிட்டிருக்கலாம்.

மொத்தத்தில் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றுஆறு வருடங்களை கடந்த பின்னும் விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர்களின் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தரப்படும் என்ற வாக்குறுதி உச்சநீதிமன்றத்திலேயே காற்றில்பறக்கவிடப்பட்டது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கச் செய்வோம் என்ற மோடியின் முழக்கம் முழுமையாகநிறைவேற்றப்பட்டிருக்கலாம். கார்ப்பரேட்டுகளுடன் ஒப்பந்தம் போடப் போகிறார்களே என்று நினைத்திருக்கலாம். அதனால் விவசாயிகளுக்குஇந்த வட்டிச் சலுகை தேவையில்லை என்றுமுடிவு செய்திருக்கலாம். 

நுகர்வோர் சாதன கடன், மோட்டார் வாகனகடன் ஆகியவற்றுக்கெல்லாம் பொருந்துகிற வட்டிச்சலுகை டிராக்டர் போன்றவற்றுக்கு பொருந்தாமல்போனது ஏன்? இரவு, பகல் பாராமல் உழைக்கும்விவசாயிகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படுவதில்லை என்பதையே மத்திய அரசு, நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன. 

;