headlines

img

கூட்டாட்சிக்கு  குழி பறிப்பதா?

ஒரே நாடு, ஒரே வரி என்று ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்த மோடி அரசு, பெரும்பகுதி மக்க ளை வரி என்னும் வலைப்பின்னலில் சிக்க வைத்தது. அடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று விவாதத்தை துவக்கியுள்ளனர். நாட்டினுடைய ஜனநா யகத்தை வேரறுக்கும் இந்த வேலையில் மோடி அரசு முனைப்பாக உள்ளது.  மாநில உரிமைகளை கீழறுப்பு செய்யும் வேலை யில் அடுத்தக்கட்டமாக ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்று அறிவித்துள்ளனர். இதன் மூலம் பொது விநியோகத்தில் மாநிலங்களின் பங்கை  ஒட்டுமொத்தமாக காலி செய்ய துணிந்துவிட்ட னர். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் உணவு மானியத் திற்கான தொகை என்பது தொடர்ந்து வெட்டப் பட்டுக்கொண்டே வருகிறது. பல மாநிலங்கள் தங்களது சொந்த நிதியில் ஒரு பகுதியை பொது விநியோக முறைக்கு வழங்குவதன் மூலம்தான் ஓரளவு மலிவு விலையில் பொருட்கள் கிடைக்க வகை செய்யப்படுகிறது. மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுத் துறையின் மூலமும் பொது விநியோக முறை நடைபெறு கிறது.  இதையெல்லாம் சீரழித்து பொது விநியோ கத்தையும் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு தன்னு டைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற் கான சதியே ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்ற திட்டமாகும். இது துவக்கத்திலேயே எதிர்க்கப் பட வேண்டிய ஒரு திட்டமாகும்.  மோடி அரசின் தயவில் தன்னுடைய ஆட்சிக் காலத்தை நீட்டித்து வரும் மாநில அதிமுக அரசு இந்தத் திட்டத்திற்கு தன்னுடைய எதிர்ப்பை வலு வாக பதிவு செய்யவில்லை. தங்களுடைய சுயலாபத் திற்காக தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுப்பது மன்னிக்க முடியாத கொடும் குற்றமாகும். நம்முடைய அரசியல் சாசனம் இந்தியாவை பல மாநிலங்கள் கொண்ட, கூட்டாட்சி அடிப்படை யிலான ஒன்றியம் என்றே வரையறுத்துள்ளது. அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள மதச்சார் பின்மை கோட்பாட்டின் மீது மண் அள்ளிப் போடும் வேலையை செய்து வரும் மோடி அரசு தற்போது கூட்டாட்சி கட்டமைப்பின் ஆணிவேரை யும் அசைத்துப்பார்க்க துணிந்துவிட்டது.  புதியக் கல்விக்கொள்கை என்ற பெயரில் உயர்கல்வியை மட்டுமின்றி துவக்கக் கல்வி யையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும் மோடி அரசு தற்போது மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளும், மாவட்ட நீதிபதிகளும் அகில இந்திய தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்படு வார்கள் என்று அறிவித்துள்ளது. இதற்காக அகில இந்திய நீதித்துறைத் தேர்வு ஆணையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.  நீட் தேர்வு என்ற பெயரில் மருத்துவக் கல்வியிலி ருந்து ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மாணவர்களை விரட்டும் சதிபோன்றது தான் இதுவும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலின்படி மிருக பலத்துடன் கூடிய மத்திய அரசு, பலவீனமான மாநில அரசுகள் என்பதை நோக்கி நாட்டை நடத்திச் செல்கிறது மத்திய பாஜக அரசு. இதை முறியடிக்காவிட்டால் கூட்டாட்சி என்பது வெறும் அலங்கார வார்த்தையாகிவிடும்.

;