headlines

img

தொழிலாளர் விரோத மசோதாவை கைவிடுக!

8 மணிநேரம் வேலை, 8மணி நேரம்  ஓய்வு,  8 மணிநேரம் உறக்கம் என்பது உலகத் தொழிலாளி வர்க்கம்  போராடிப்  பெற்ற உரிமையாகும்.  அந்த உரிமையை பறிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தொழிலாளர் விரோத மசோதாவை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இது  தொழிலா ளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்த மசோதாவைத் தொழிலாளி வர்க்கம் ஒருபோதும்  ஏற்காது. முறியடிக்கும் வரை எதிர்த்துப் போராடும் என்பது உறுதி. 

150 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலா ளர்கள் போராடிப் பெற்ற உரிமையை ஒரு திருத்தம் மூலமாகத் தமிழ்நாடு அரசாங்கம் பறிப்பதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள். ஒன்றிய பாஜக  அரசு நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றியபோது அனைத்து எதிர்க்கட்சிக ளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதில் திமுகவும் அடக்கம்.  நாட்டிலேயே  கர்நாடக  பாஜக  அரசுக்கு அடுத்தபடியாக  இந்த மசோதாவை நிறைவேற்றி தொழிலாளர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.

2020ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயன்ற போது அதை  திமுக கடுமையாக எதிர்த்தது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எட்டுமணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திய தற்கு திமுக கண்டனம் தெரிவித்ததையும் தொழி லாளி வர்க்கம் மறந்துவிடவில்லை. தொழில்நுட் பம் வளர்ந்து வரும் நிலையில், வேலை நேரம் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில் தொழி லாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்க ளுக்குப் புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் உள்ளது.

எட்டுமணிநேர வேலை என்ற உரிமைக்காகத் தொழிலாளர்கள் பல போராட்டங்களை நடத்தி யுள்ளனர். இந்த கோரிக்கையை அடைய ஏராள மான  தொழிலாளர்களைத் தொழிற்சங்க இயக்கம் இழந்துள்ளது.  தேவைப்படும் காலங்களில் தொழிற் சாலை ஆய்வாளரிடம் அனுமதி பெற்று வேலை நேரத்தை மாற்றிக்கொள்ளலாம் என்பது படிப் படியாக நிரந்தரமாகிவிடும். சட்டப்பேரவையில் இம் மசோதா நிறைவேற்றப்படும்போது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடு தலை சிறுத்தைகள்  உள்ளிட்ட  கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இந்தச் சட்டத்தை திமுகவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் கூட ஏற்காது. எனவே தொழிலாளர்கள் நலனில் தமிழ்நாடு அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமாயின் இந்த மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் என்பது மதவாத அரசுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல; மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத,  மக்கள் விரோத கொள்கை களுக்கு எதிரான போராட்டமும் ஆகும் என்பதை  திமுக புரிந்து கொள்ளவேண்டும்.  தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற  உரிமையைப்  பாது காக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்து கொள்ள வேண்டும்.