headlines

img

தலை குனிந்து நிற்கும் ஜனநாயகம்

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக தலைவர் எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். சட்டப் பேர வையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள் ளது. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை யாகும். தற்போதைய நிலையில் பாஜகவிற்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு உரிய பெரும்பான் மை இல்லை என்பது தெரிந்தே ஆளுநர் ஆட்சி யமைக்க அனுமதியளித்திருப்பது அப்பட்டமான குதிரை பேரத்திற்கே வழி வகுக்கும். கர்நாடக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்கு களும் கிடைத்த நிலையில் குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். 

அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரில் 3 பேரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் ரமேஷ் குமார் புதனன்று இரவு அறிவித்தநிலையில், வியாழ னன்று காலை எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அவசர அவசரமாக அவரும் பதவியேற்றுள்ளார்.  கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் ஆளுநர் அவரை பதவியேற்க அழைத் தார். எனினும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா ராஜினாமா செய்து பதவி இழந்தார். 

இதனிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த அரசை கவிழ்ப்பதற்கு அனைத்து வகை யான சூழ்ச்சிகளிலும், கீழ்த்தரமான பேரங்களி லும் பாஜக ஈடுபட்டது. ஒரு காலத்தில் வித்தியா சமான கட்சி என்று தன்னை கூறிக் கொண்ட பாஜகவின் தேசிய தலைமையும் இதற்கும் முழு ஆசியும் ஆதரவும் வழங்கியது. ஆளுநரையும் தங்களது நோக்கத்திற்கு கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பயன்படுத்திக் கொண்டனர். இந்த நிலையில்தான் ஜனநாய கத்தை கேலி செய்யும் வகையில், பல நூறு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு, கட்சி தாவல் நாடகம் அரங்கேறியது. எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டு மும் பையில் சிறை வைக்கப்பட்டனர். இன்று வரை  அவர்கள் தலையை காட்டவில்லை. மேலும் பலருக்கு பதவி, பண ஆசைக்காட்டி எப்படியாவது ஆட்சி யமைத்துவிட வேண்டும் என்ற பாஜகவின் திட்டப்படி அனைத்தும் நடந்து வருகிறது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி லோக்பால் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு பதவியிழந்த எடி யூரப்பாவை மீண்டும் முதல்வராக்கி அழகு  பார்க்கி றது பாஜக. தாங்கள் ஊழலை முற்றாக ஒழித்து விட்டதாக அவர்கள் கூறிக்கொள்வதுதான் சகிக்க முடியாததாக உள்ளது.  கர்நாடக தேர்தலில் மக்களின் தீர்ப்பை பெற முடியாமல் ஒரு முறை ஆட்சியமைத்து அவமா னப்பட்டவர்கள் மறுமுறை அதே வழியில் மீண்டும் முயற்சிக்கிறார்கள். பாஜக நடத்தும் ‘கர்நாடக’ சங்கீத கச்சேரி முற்றிலும் அபஸ்பரமாகவே ஒலிக்கிறது.

;