இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திமைனஸ் 24 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாகமத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது.கடந்த 2019-20ம் நிதியாண்டில் முதல் காலாண்டில் ஜிடிபி 5.3 சதவீதம் அளவுக்கு உயர்ந்த நிலையில் இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத பெரும் சரிவை சந்தித்துள்ளது.
கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் பொருளாதார சுழற்சி பாதிக்கப்பட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய ஆட்சியாளர்கள் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். ஆனால்இந்த நிலை ஏற்படுவதற்கு கொரோனா மட்டுமே காரணமல்ல. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் முன்யோசனையற்ற திடீர் ஊரடங்கு போன்றவையும் இந்த அவலநிலைக்கு காரணமாகும். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பது ஓரளவு உண்மை. ஆனால் அதை சரிசெய்கிறோம் என்கிற பெயரில்கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வகைதொகையற்ற வரிச்சலுகை, தள்ளுபடி, கடன்வசதி என அள்ளிக்கொடுத்த மோடி அரசு இவர்கள் செய்யும் முதலீடு மூலம் பொருளாதாரம் மீட்சிபெறும் என மக்களை நம்பவைக்க முயன்றது.
மத்திய அரசின் நடவடிக்கையால் அம்பானி,அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பும், வர்த்தகமும் பல மடங்கு உயர்ந்ததே அன்றி தனியார் முதலீட்டின் மூலம் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியவில்லை.பொது முதலீட்டை அதிகப்படுத்துவதன் மூலமும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பெரும்பகுதி மக்களுக்கு ரொக்கமாக நிவாரணம் அளிப்பதன் மூலமும் அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து உள்நாட்டுச் சந்தை சுழற்சியைபலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் மத்தியஅரசு அந்த திசை வழியில் சிந்திக்கவேயில்லை. மாறாக, பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியைஅதிகரிப்பது, பெட்ரோல்-டீசல் விலையை தொடர்ந்துஉயர்த்துவது என மக்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச பொருளாதாரத்தையும் ஒட்ட உறிஞ்சி முதலாளிகளை கொழுக்க வைத்தது. விவசாயத்துறைமட்டுமே இந்தக் காலத்தில் ஓரளவு சமாளித்துள்ளது. அதற்கும் கூட பருவமழை உள்ளிட்டவைகாரணமேயன்றி மோடி அரசின் உதவி அல்ல.கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்களை மேலும் மேலும் தனியார்மயமாக்கியது. இந்த அனைத்தும் சேர்ந்துதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதலபாதாளத்தில் தள்ளியுள்ளது. இதன் மொத்த சுமையையும் ஏழை-எளிய சாமானிய மக்கள் தலையில் சுமத்தவே மோடிஅரசு முயல்கிறது. ஜிடிபி வீழ்ச்சி என்பது ஒருஅறிகுறிதான். இதை சரிசெய்யவில்லையென் றால் இந்தியப் பொருளாதாரம் மீட்க முடியாத எல்லைக்குச் சென்றுவிடும்.