headlines

img

யாருக்கு சுமை?

சிபிஎஸ்இ கல்வி வாரியம் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் கல்வி வாரியமாக மாறிவிட்டதோ என்று சந்தேகப்படும் வகையில் அதன் அடுத்த டுத்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

கொரோனா முடக்கத்தினால் கல்வி நிலை யங்கள் திறப்பது தாமதமாகும் நிலையில் மாண வர்களின் பாடச்சுமையை குறைக்க வேண்டு மென்ற கோரிக்கை எழுந்தது. இதையொட்டி பாடச்சுமை 30 சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் இதை ஒரு வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்டு மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய பாடங்களை நீக்கத் துவங்கியுள்ளது சிபிஎஸ்இ. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை குறைக்கப்படும் பாடங்கள் குறித்த அறிவிப்பில் கூட்டாட்சி, குடி யுரிமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பன்முகத் தன்மை போன்ற பாடங்கள் நீக்கப்பட்டன. 

தற்போது 9 மற்றும் 10ஆம் வகுப்புக்கான தமிழ்ப் பாடப்புத்தகத்தில் 7 முதல் 9 வரையிலான அத்தியாயங்கள் நீக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் தந்தை பெரியார் சிந்தனை கள், மபொசியின் எல்லைப் போராட்ட வரலாறு போன்ற பாடங்கள் நீக்கப்படுவதோடு திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்தப் பாடங்க ளும், இந்திய தேசிய ராணுவத்தில் தமிழரின் பங்கு போன்ற பகுதிகளை அடியோடு நீக்கப் பட்டுள்ளன. 

குடியுரிமை துவங்கி, திருக்குறள், சிலப்பதி காரம் வரை மதவெறி சக்திகளுக்கு  ஆகாத விஷயங்களாகவே உள்ளன. பாடச்சுமையை குறைக்கிறோம் என்கிற பெயரில் பன்முகத் தன்மையையும், வேற்றுமையின் ஒற்றுமை காணும் இந்திய மாண்பையும் சிதைக்க முயல்கிறார்கள்.

ஏற்கெனவே புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் ஒட்டுமொத்த பாடத்திட்டத்தையும், மத்திய அரசுதான் தயாரிக்கும் என்றும், மாநிலங் கள் ஒன்றிரண்டு பாடங்களை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் படியாகவே சிபிஎஸ்இ வாரியத்தின் மூலம் ஆழம் பார்க்கிறது மத்திய பாஜக அரசு. 

வட மாநிலங்களில் கற்பிக்கப்படும் பாடங்க ளில் அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் பொருந்தாத புராணக் கதைகளை வரலாறு என்ற பெயரில் மாணவர்கள் சிந்தனையில் புகுத்தி வருகின்றனர். கணிதப் பாடத்தில் கூட அவர்க ளுடைய குறுக்குப் புத்தி வெளிப்படுகிறது. இந்தப் பின்னணியில் கல்வித்துறையை முற்றாக வலதுசாரி மயமாக்க மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாகவே, இத்தகைய பாடங்கள் நீக்கப்படுகின்றன. இதை அனுமதிக் கக்கூடாது. பாடச்சுமை குறைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மதச்சார்பின்மையும், திருக் குறளும் சுமையல்ல. மனித குலம் கற்றறிய வேண்டிய அடிப்படையாகும். 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று போதிக்கும் வள்ளுவமும், அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற சிலம்பின் சிந்த னையும் தமிழ்ச் சமூகத்தின் மரபு வழிப்பட்டவை. அதை துண்டிக்க நினைப்பது பன்முகத்தன்மை மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

;