headlines

img

தடுப்பூசி அரசியல்

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி  வருகிறது. எனினும் அந்த நோயின் தீவிரம் குறைந்து வருவதாகவும் தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் எதிர்ப்பாற்றல் அதிகரித்து வருவதால் இந்த நோய் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கிவிடும் என பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய வைரஸ் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த நோய் நீண்டகாலம் நீடிக்கும் என்றாலும் மற்ற நோய்களைப் போல சாதாரண நோயாக மாறிவிடும் என்கின்றனர் சில மருத்துவர்கள். 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசி போடப் பட்டுள்ளது. வயது வந்தோரில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள் ளது என ஒன்றிய அரசு கூறுகிறது. ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து பூஸ்டர் ஊசி போடும் பணி துவங்கியுள்ளது. 

தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் இலவச விநி யோக விசயத்தில் ஒன்றிய பாஜக அரசின் பிடிவாதம் மற்றும் குளறுபடியினால் இந்தியா பல்வேறு பாதகங்களை சந்திக்க நேர்ந்தது. பொதுத்துறை நிறுவனங்களை தடுப்பூசி உற்பத்தி பணியில் ஈடுபடுத்த இப்போதுவரை மோடி அரசு மறுத்து வருகிறது. 

புனே சீரம் மற்றும் ஹைதராபாத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனு மதி வழங்கப்பட்டது. அதிலும் கூட ஒரே மருந்துக்கு மூன்று வகையான விலைகளை ஒன்றிய அரசு தீர்மானித்தது. துவக்கத்தில் அனைவருக்கும் இல வச தடுப்பூசி என்பதையே  மோடி அரசு ஏற்க மறுத்தது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தொடர்ச்சியான போராட்டம், சமூ கத்தில் ஏற்பட்ட அழுத்தம், உச்சநீதிமன்றத்தின் வலுவான தலையீடு ஆகியவற்றின் காரணமாக ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை இலவசமாக தர முன்வந்தது. அதற்கு முன்பு ஒன்றிய அரசை விட கூடுத லான விலை கொடுத்து மாநில அரசுகள் தடுப்பூசி களை வாங்க வேண்டியிருந்தது. இதனால் காலதாமதம் ஏற்பட்டது. 

இப்போதும் கூட 25 விழுக்காடு தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. தடுப்பூசியை வீணாக்குவதில் தனி யார் மருத்துவமனைகள்தான் முதலிடத்தில் உள்ளன. இருந்தாலும் தடுப்பூசி உற்பத்தியிலும் விநியோகத்திலும் தன்னுடைய தனியார்மய மோகத்தை விட்டுத்தர மோடி அரசு தயாராக இல்லை. 

வளர்ந்த நாடுகளில் பெருமளவு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த போதும் ஏழை நாடுகளில் தடுப்பூசி செலுத்துவதில் பெரும் இடைவெளி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி களை பதுக்கி வைக்கும் நிலை உள்ளது. இது ஒரு  உலகளாவிய தொற்று நோய் என்ற நிலையில் தடுப்பூசி போடும் பணியும் உலக அளவில் நடந்தால் தான் இந்த நோயை முடிவுக்கு கொண்டுவர முடியும். ஆனால் மக்கள் உயிருடன் விளையாடும் முத லாளித்துவம் இதிலும் தன்னுடைய வேலையை காட்டிக் கொண்டிருப்பதுதான் அவலத்தின் உச்சம்.

;