headlines

img

மறக்கக் கூடாத நாள் டிசம்பர்-6

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவை என்ற பெயரில் திரட்டப்பட்ட கும்பலால் பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. மதச்சார்பின்மையின் மீதும் கடப்பாரை இறங்கிய நாள் இன்று.

மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், உமா பாரதி உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்கவில்லை என நீதிமன்றம் கூறியது.

1528- 1530 காலகட்டத்தில் பாபரின் உத்தர வின் பேரில் அவரது ஆளுநர் மீர் பாகி என்பவ ரால் இந்த மசூதி கட்டப்பட்டது. ஆனால் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமபிரான் பிறந்தார் என்று ஒரு கட்டுக்கதையை கட்டிவிட்டனர். இதற்கான ஆதாரங்கள் எதையும் அவர்க ளால் கடைசி வரை தரமுடியவில்லை.

தொடர்ந்து இந்த கதையைப் பரப்பி வந்த தோடு எல்.கே.அத்வானி ரதயாத்திரையையும் நடத்தினார். வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியின் போது மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டதுதான் அயோத்தி பிரச்சனையை ஆர்எஸ்எஸ் பரிவாரம் தீவிர மாக கையில் எடுத்ததற்கு பின்புலமாகும்.

மண்டலா? கமண்டலா? என்ற விவாதம் நடந்தது. பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற் படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என் பதே ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் எண்ணம். அதற்காகவே ராமர் கோயில் பிரச்சனையை கையிலெடுத்தனர்.

அயோத்தி இடம் தொடர்பான வழக்கும் நரேந்திர மோடி ஆட்சியில் தந்திரமாக முடித்து வைக்கப்பட்டு மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பல்லாயிரம் கோடி செலவில் ராமருக்கு கோவி லும் எழுப்பப்பட்டுவிட்டது. அயோத்தி பிரச்ச னையில் வழங்கப்பட்டது தீர்ப்பே அன்றி நீதி யல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப் பிட்டது கவனம் கொள்ளத்தக்கது.

இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் முன் னுக்கு வந்துள்ளது. மறுபுறத்தில் ராமர் கோவில் கட்டுமானம்தான் தங்களது 10 ஆண்டு கால ஆட்சியில் சாதனை என பிரதமர் மோடியால் முன்னிறுத்தப்படுகிறது. 1990களில் நிலவிய அதே சூழல் இப்போது மீண்டும் எழுந்துள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பை பாஜக ஏற்கவில்லை.  ஆனால் சமூக நீதி சக்திகள் இதில் உறுதிகாட்ட  வேண்டும். மதவெறிக்கு நாடு மிகப் பெரிய விலை கொடுத்து வருகிறது. இந்திய நாடு மதச்சார் பற்ற நாடாக தொடரப் போகிறதா இல்லையா என்பது தான் டிசம்பர் 6 எழுப்பும் கேள்வி.