headlines

img

செங்கோட்டையன் பேட்டியும் பாஜகவின் குதூகலமும்

செங்கோட்டையன் பேட்டியும்  பாஜகவின் குதூகலமும்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்  அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. மீண்டும் இந்த அணி  வெற்றி பெறுவது உறுதி. இருந்தாலும் அதிமுக முதுகில் சவாரி செய்தாவது ஆட்சியைப் பிடித்து  விடவேண்டும் என்ற பகல் கனவுடன் பாஜக தலைமை பலவிதமான திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு ’வலுவான அதிமுக’ தேவை. இதற்காகவே  அதிமுகவினர் அனை வரும் ஒன்று சேரவேண்டும் என்று  பாஜக தலைமை வலியுறுத்தி வருகிறது. தற்போது அதிமுகவில் அதிருப்தியில் உள்ள  மூத்த தலை வர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையனும் அதே கருத்தை எதிரொலித்துள்ளார்.

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் எதிரான கொள்கைகளை கடை ப்பிடித்து வரும் ஒன்றிய பாஜக அரசுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை  ஏற்காத தமிழகம்,  கேரளா உள்ளிட்ட மாநி
லங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுத்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

இதையெல்லாம் மறைத்து தமிழக அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமர்த்தி மக்களின் வாக்குகளை அள்ளிவிடலாம் என்று  பாஜக கனவு காண்கிறது. ஆனால் அதிமுக தலை மையே  பல பிரிவுகளாக பிரிந்து  பலவீனமாக உள்ளது. எனவே திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை ஒன்றுபடுத்த பலமான அதிமுக  தேவை என்பதற்காக, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இறங்கினர். 

இதற்காக செங்கோட்டையன் தில்லிக்கு வரவழைக்கப்பட்டார். அவர் அங்கு  சீதாராமன்  உள்ளிட்டவர்களை சந்தித்துப்பேசினார். அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக யாரை வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே! ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்த்தால் தனது தலைமைக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமியும் அதை ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்து வருகிறார். 

பிரிந்து சென்ற அதிமுக தலைவர்களை சேர்க்க வேண்டும். அனைவரையும் ஒன்றிணைக்க 10  நாட்கள் அவகாசம் தருகிறேன். இல்லை யென்றால் அந்த தலைவர்களை ஒருங்கிணை க்கும் முயற்சியில் நானே ஈடுபடுவேன் என்று தற்போது அதிமுக தலைமையை செங்கோட்டையன்  எச்சரித்திருக்கிறார். இவரது   நடவடிக்கையின் பின்னணியில் நிச்சயம் பாஜக உள்ளது என்பதை உணர்த்துவது போல் தலைவர் நயினார் நாகேந்திரன், செங்கோட்டையன் பேட்டி நல்ல விஷயம்தானே என்று சொல்லி யிருக்கிறார். ஆடிட்டர் குருமூர்த்தியும் இது கலகக்குரல் என்கிறார்.

வலுவான அதிமுக என்பதைக் காட்டு வதற்காக, பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பாஜக நெருக்கடி அளித்து வரு கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அதிமுக தலைமை யையும் மாற்ற பாஜக தயங்காது. அதன் வெளிப்பாடுதான் செங்கோட்டையனின் இந்த ‘துணிச்சலான’ பேட்டி.