புதிய அத்தியாயம்
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ - யின் இந்தியப் பயணமும், பிரதமர் மோடியுட னான சந்திப்பும் உலகளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த சந்திப்பின் பின்னணியில், பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப் பின் மாநாட்டிற்காக சீனாவுக்கு செல்லவிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
2020இல் கல்வான் மோதலுக்குப் பிறகு இரு நாடு களுக்கிடையேயான நட்புறவில் இந்த சந்திப்பு புதிய அத்தியாயமாகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி, கடந்தாண்டு, கஸானில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான சந்திப்பிற்குப் பிறகு, இந்திய-சீன உறவுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. இது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான உறவுகள் மற்றும் பிராந் தியச் செழிப்புக்கு பங்களிக்கும் என்றும் அவர் தெரி வித்துள்ளார்.
சீனத் தரப்பில் அரியவகை கனிமங்கள், உரங்கள், துளையிடும் இயந்திரங்கள் ஆகிய வற்றின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. இப்படி இரு நாடுகளும் பல்வேறு அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளன. இது வரவேற்கத்தக்கது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியா மீது கூடுதலாக 25 சதவிகித வர்த்தக வரியை விதித்து, மொத்தமாக வரியை 50 சதவிகித மாக உயர்த்தியுள்ளார். இந்நிலையில் இந் திய-சீன உறவு உலக அரங்கில் கூடுதல் முக்கியத் துவம் பெற்றிருக்கிறது. இந்தியா, ரஷ்யாவிடமி ருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே கூடுதலாக 25 சதவிகி தம் அபராத வரி விதிக்கப்பட்டிருப்பதாக அமெ ரிக்கா கூறுகிறது. இந்தியா யாரிடம் என்ன வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா எப்படி நிர்ணயம் செய்ய முடியும்?
அதே நேரம் சீனா, துருக்கி, ஐரோப்பிய ஒன்றி யம், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள் முதல் செய்கின்றன. அந்த நாடுகள் மீதெல்லாம் அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கவில்லை. ஆனால் இந்தியா மீது மட்டும் வரி விதித்திருக் கிறது. இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கும் சவால் ஆகும்.
2024இல் அமெரிக்கா, ரஷ்யாவுடன் சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடத்தி யுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 41 பில்லியன் யூரோ மதிப்பிலான பொருட்களை ரஷ்யாவிலி ருந்து இறக்குமதி செய்திருக்கிறது. அந்த வர்த்த கத்திற்கு அமெரிக்கா எந்த தடையும் விதிக்கவில்லை.
டிரம்ப்பின் வர்த்தக வரிகள் பிரிக்ஸ் நாடுகளுக் கிடையே மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக் கிறது. இந்திய-சீன உறவுகளின் மேம்பாடு இதற்கு உதாரணமாகும். பிரிக்ஸ் நாடுகளுக்கி டையே உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வ தற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இதனை பயன்படுத்தி டாலர் மேலாதிக்கத்திற்கு எதிராக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள் வதற்கான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.