வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான வழக்கு கள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கள் கூறியிருப்பது எந்த வகையிலும் பொருத்த மல்ல.
நாட்டில் கடுமையான சூழல் நிலவி வருகிறது. ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டால் அந்த விஷ யத்தில் நீதிமன்றத்தின் நடவடிக்கை அமைதியை கொண்டு வருவதாக இருக்க வேண்டும். தற்போ தைய சூழலில் இந்த வழக்குகளை விசாரித்தால் அமைதி திரும்பும் என கருதமுடியும். வன்முறை சம்பவங்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப் படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார். இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பதன் மூலம் அமைதியை நிலை நாட்டிவிட முடியும் என நீதிபதி கருதுகிறாரா? உண்மையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது வன்முறையை ஏவிவிடுவது பாஜக ஆளும் மாநில அரசுகள் தான். மத்திய அரசும் இந்த வன்முறைக்கு துணை நிற்கிறது. அரசுகளைப் பார்த்து வன்முறையை நிறுத்துங்கள் என்றுதான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருக்க வேண்டும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிகவும் அமைதியான முறையில்தான் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு நகரிலும் லட்சக் கணக்கானவர்கள் கூடி இந்த சட்டத் திருத்தத் திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து அமைதியாக கலைந்து செல்கின்றனர்.
பாஜக ஆளும் உ.பி.மாநிலத்தில் போராட்டக் காரர்கள் மீது கடுமையான அடக்குமுறை கட்ட விழ்த்துவிடப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்க ளில் நடந்த சம்பவங்களுக்கும் மத்திய, மாநில பாஜக அரசுகளே பொறுப்பேற்க வேண்டியி ருக்கும். இந்த நிலையில் வன்முறையை நிறுத்தி விட்டு வாருங்கள், வழக்கை விசாரிக்கிறோம் என யாருக்கு உபதேசம் செய்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. இப்படி ஒவ்வொரு வழக்கி லும் கூறத் துவங்கினால் எந்த வழக்கையாவது விசாரிக்க முடியுமா?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை கோவில் கட்ட கொடுத்துவிடுமாறு கூறிய உச்சநீதி மன்றம் பாபர் மசூதியை இடித்தது சட்ட விரோதம் என்று கூறியது. ஆனால் இடிப்பில் ஈடுபட்டவர் கள் தொடர்பான வழக்கு நடைபெறவே இல் லையே, அந்த வழக்கை முடித்தால்தான் இடம் யாருக்கு என்ற வழக்கில் தீர்ப்புச் சொல்வோம் என்று கூறியதுண்டா?
மோடி அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது அரசியல் சாசனத்தின் நெறிகளுக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் சட்டத்திற்கு சமம் என்று கூறப்படும் நிலையில் அரசியல் சட்டத்தின் படி அமைக் கப்பட்ட உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம் தொடர்புடைய ஒரு வழக்கை விசாரிக்க நிபந்தனை விதிப்பது தவறான முன்னுதார ணமாகும். பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அணுகுமுறை பல்வேறு ஐயங் களை எழுப்புகிறது.