headlines

img

இனியும் சகித்துக் கொள்ள முடியாது

இனியும் சகித்துக் கொள்ள முடியாது 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மரியாதைக் குரிய பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசி தாக்குதல் தொடுக்க முயன்றிருப்பது வன்மையான கண்ட னத்திற்குரியது. இந்திய அரசியல் சட்டத்தின் மீதும், மனித மாண்புகள் மீதும் மரியாதை கொண்ட அனைவரும் இதை கண்டிக்க முன்வர வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்க றிஞர்கள் மதவெறி கொண்டவனின் கெடு செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள னர். நாட்டு மக்கள் அனைவரும் கொதித்தெழ வேண்டிய நிகழ்வு இது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த போது, ராகேஷ் கிஷோர் என்ற பெயர் கொண்ட ஆசாமி தலைமை நீதிபதி மீது செருப்பை வீசி தாக்கு தல் தொடுக்க முயன்றுள்ளான். காவலாளிகள் உட னடியாக இதனை தடுத்து நிறுத்திவிட்டனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் தொடுக்குமளவுக்கு துணிந்ததற்கு அவன் கூறியுள்ள காரணம் “சனாதன தர்மத்தை இழிவு படுத்துவதை சகித்துக் கொள்ள மாட்டோம்” என்பதுதான். இத்தகைய வெறியர்கள் அதி கரித்து வருவது கவலையளிக்கிறது. 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ  ஆலயத்தில் தொல் பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விஷ்ணு சிலையை மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிபதி பி.ஆர்.கவாய் தள்ளுபடி செய்துள்ளார். இந்த வழக்கு விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பின்னணியில் தான் சனாதன தர்மத்தை பாதுகாப்பதாக சொல்லிக் கொண்டு ராகேஷ் கிஷோர் இந்த அநாகரீகமான செயலில் ஈடுபட்டுள் ளான். கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவன் மனம் வருந்துவதாக இல்லை. மாறாக, என்னு டைய செயலுக்காக நான் வருத்தப்படவோ, மன்னி ப்புக் கேட்கவோ மாட்டேன். எல்லாம் வல்ல கடவுள் தான் என்னை இவ்வாறு செய்யச் சொன் னார் என்று திமிராகக் கூறியுள்ளான்.

மகாத்மா காந்தியை படுகொலை செய்த இந்துத் துவா வெறியன் நாதுராம் கோட்சேயும், தன்னு டைய செயலை நியாயப்படுத்த பகவத் கீதையை மேற் கொள் காட்டியதோடு, கடவுள் ஆணையின்படியே காந்தியை கொலை செய்வதாக கூறினான் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலினத்தைச் சேர்ந்த பி.ஆர்.கவாய் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியில் அமர்ந் திருப்பதை சாதி, மத வெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பிறப்பால் வேறுபாடு காணும் அழுகிய கருத்தியலின் வன்மமான வெளிப் பாடுதான் ராகேஷ் கிஷோர் போன்றவர்கள். இத்த கைய கயவர்களைத்தான் இந்துத்துவாவின் பெயரால் வளர்த்து வருகிறார்கள். இது ஒரு தனி மனிதன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அல்ல. இந்திய அரசியல் சட்ட மாண்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். இது தடுக்கப்படவில்லை என்றால் மனித நாகரிகமே கேள்விக்குறியாகும்.