headlines

img

மலைபோல் குவியும் நெகிழிக் கழிவுகள்

சமீபத்திய பத்தாண்டுகளில் நெகிழிகளின் (பிளாஸ்டிக் பைகள்) பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, கழிவுகளின் கலவையில் கடுமை யான அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 25 ஆயி ரத்து 940 டன்கள் அளவிற்கு நெகிழிக் கழிவுகள் உண்டாக்கப்படுகின்றன. இவற்றில், சுமார் 40 விழுக்காடு மீண்டும் சேகரிக்கப்படுவதுமில்லை அல்லது மறுசுழற்சிக்கு விடப்படுவதுமில்லை.

நெகிழியில் சுற்றுச்சூழல் மிகக் கடுமையான அழிவுக்கு உள்ளாகியிருப்பது மட்டுல்ல, மனி தர்கள் சுமார் 250 அளவிலான நுண்ணிய நெகிழித் துண்டுகளை ஒவ்வொரு நாளும் உண்கின்றனர் என்று நடப்பு ஆராய்ச்சி இப்போது நிறுவி யிருக்கிறது. அதாவது ஒரு வார அளவில் ஒரு கிரெடிட் கார்டு அளவுக்கு இணையான நெகிழி. இத்தகைய நுண்ணிய நெகிழி உட்கொள்வது என்பது அலட்சியமானமுறையில் நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்துவதால் மட்டுமல்ல, மக்கள் உபயோகப்படுத்துகிற பற்பசை அல்லது முகத்தைக் கழுவுவதற்குப் பயன்படும் பல்வகை நுண்ணிய குண்டுமணிகளின் மூலமாகவும் நேரடியாக உள்செல்கின்றன. பிரதானமாக புட்டி யில் அடைக்கப்பட்ட தண்ணீர் வழியாக உட்செல்கிறது. மருத்துவப் பயன்பாட்டில், நெகிழிப் புட்டிகள் மருந்துகளை, மாசுபடுத்து கின்றன என்றும், இந்தியாவில் பாதுகாப்பான விதத்தில் நெகிழி சிப்பங்கள் தயாரிக்கப்பட வில்லை எனவும் அறிக்கைகள் குறிப்பிட்டுள்ள போதிலும், இன்றளவும் நெகிழி என்பது பாது காப்பான மற்றும் சுத்தமான ஒன்று என்று கருதப் பட்டு அதுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

மக்களின் வாழ்க்கைமுறை செல்லரித்துப் போயிருப்பது, நகர்ப்புறங்களின் புறப்பகுதிகளில் குப்பைகள் மலைபோல் வளர்ந்திருப்பதில் பிரதி பலிக்கிறது. தில்லியில் காசிபூர் பகுதியில் உள்ள குப்பை மேட்டின் உயரம் 65 மீட்டரைத் தொட்டி ருக்கிறது. இத்தகைய குப்பைக் குவியல்களி லுள்ள பல்வேறு பொருள்களின் கரைசல்களும் சுத்தப்படுத்தப்படாத கழிவுப்பொருள்களும் தண்ணீரை மாசுபடுத்தியும்  இவற்றை எரிக்கும் போது  புற்று உண்டாக்கக்கூடிய மாசை உருவாக்கி யும் ஓர் ஆழமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கழிவுப்பொருள்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக முறையான மேலாண்மை இல்லாத தன் காரணமாக, மிகவும் வீணாகிப்போன மற்றும் அசிங்கமான நெகிழிப் பொருள்களை மறு சுழற்சிக்கு உட்படுத்தும்போது அவை மிகவும் செலவு பிடிக்கக்கூடியதாகவும், பாதுகாப்பற்ற தாகவும், தண்ணீர் அதிக அளவு பயன்படுத்த வேண்டியதாகவும் மாறியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள கம்பெனிகள் இறக்கு மதிக்குத் தடை இருந்தபோதிலும்கூட, நெகிழி யை இறக்குமதி செய்வதற்கே முன்னுரிமை கொடுக்கின்றன. ஏனெனில், மறுசுழற்சிக்கு ஆகும் செலவைவிட இது குறைவு.

‘தூய்மை இந்தியா’வில் ஒரு சாதாரண நெகிழி கூட பயங்கர பிரச்சனையாக மாறியிருக்கிறது. மோடி அரசே, நீங்கள் வெகுதூரம் செல்ல வேண்டி யிருக்கிறது. ஆனால் இன்னும் துவங்கவே இல்லை என்பதை அறிவீர்களா?

;