headlines

img

சிவக்கிறது லத்தீன் அமெரிக்கா

“இவர் ஒரு ஆபத்தான இடதுசாரி. ஹோண்டு ரன் சாவேஸ்” என்று அமெரிக்காவால் குறி வைக்கப் பட்ட மனுவேல் ஜெலாயா பலவந்தமாக ஆட்சி யிலிருந்து வெளியேற்றப்பட்ட வஞ்சகத்திற்கு 12 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்திருக்கிறார்கள் ஹோண்டுரஸ் மக்கள். மீண்டும் சோசலிஸ்ட் கட்சி யின் ஆட்சியை கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் கவனிக்கத்தக்க பதிலடி என்னவென்றால், எந்த மனுவேல் ஜெலாயாவை அமெரிக்க கைக் கூலிகள் அராஜகமாக கைது செய்து நாட்டை விட்டே வெளியேற்றினார்களோ அதே ஜெலா யாவின் மனைவி சியோமரா காஸ்ட்ரோவை தங்க ளது ஜனாதிபதியாக தேர்வு செய்திருக்கிறார்கள் ஹோண்டுரஸ் மக்கள்.

மத்திய அமெரிக்காவில் உள்ள குட்டி நாடு ஹோண்டுரஸ். மத்திய அமெரிக்க பிரதேசத்தை எப்போதுமே தனது புறவாசல் போலவும், அந்த நாடுகளின் மக்களை அடிமைகள் போலவும் தான் நடத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்க ஏகாதி பத்தியம். அமெரிக்க நாசகர உளவு அமைப்பான சிஐஏ, மத்திய அமெரிக்க  நாடுகளில் அரங் கேற்றாத பயங்கரங்களே இல்லை. இத்தகைய சூழலில்தான் ஹோண்டுரஸ், கியூபாவின் ஈர்ப்பால், வெனிசுலா ஜனாதிபதியாக இருந்த சாவேஸ் அளித்த உத்வேகத்தால் இடதுசாரி பாதையில் திரும்பியது. 12 ஆண்டுகளுக்கு முன்பு சோசலிஸ்ட் கட்சி தலைவர் மனுவேல் ஜெலாயா மகத்தான வெற்றி பெற்று ஜனாதி பதியானார். பிடல் காஸ்ட்ரோ, ரால் காஸ்ட்ரோ, ஹியுகோ சாவேஸ், பிரேசிலின் லூலா, பொலிவி யாவின் மொரேல்ஸ், நிகரகுவாவின் டேனியல் ஒர்ட்டேகா- இவர்களின் வரிசையில் இணைந் தார் மனுவேல் ஜெலாயா. 

ஆத்திரத்தில் கொந்தளித்தது அமெரிக்கா. சிஐஏவை களத்தில் இறக்கியது. வலதுசாரி சக்தி களை தூண்டிவிட்டு, ராணுவத்தில் கைக்கூலி களை உருவாக்கி, ஆயுதமுனையில் ஜெலாயாவை ஜனாதிபதி மாளிகையிலேயே கைது செய்து, விமானத்தில் ஏற்றி கோஸ்டாரிகாவில் கொண்டுபோய் அநாதையாக இறக்கிவிட்டது. அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் ஹோண்டு ரசில் புகுந்து விளையாடியது அமெரிக்கா. ஜூவன் ஆர்லாண்டோ எனும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனை ஜனாதிபதியாக்கி யது. ஹோண்டுரஸ் பொருளாதாரம் போதைப் பொருளாதாரமாக மாற்றப்பட்டது. வேலை யின்மை, வறுமையின் பிடியில் சிக்கிய மக்கள் சரியான தருணம் பார்த்து காத்திருந்தனர்.

சியோமரா காஸ்ட்ரோ களத்தில் இறங்கினார். அவரது தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், ஹோண்டுரஸ் மக்களின் வாழ்வியலை மீட்ப தற்காகவும் வலுவான போராட்டங்களை நடத்தி யது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற சோச லிஸ்ட் கட்சி இதோ மீண்டும் வெற்றி வாகை சூடி யுள்ளது. சியோமரா காஸ்ட்ரோவின் வெற்றி, லத்தீன் அமெரிக்கா மீண்டும் சிவப்புப் பாதை யில் பெருமளவுக்கு திரும்பியிருக்கிறது என்பதை கட்டியங்கூறுகிறது. அர்ஜெண்டினா, பெரு ஆகிய நாடுகளிலும் சமீபத்தில் இடதுசாரி தலைவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். சிலியும் இடது பாதைக்கு மீண்டும் திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஏகாதிபத்திய சதிகளை முறியடித்து முழுமையாக சிவக்கட்டும் லத்தீன் அமெரிக்கா.

;