headlines

img

வேண்டாம் வெளிமுகமை

வேண்டாம் வெளிமுகமை

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணி பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு வழங்கி யதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், போராடும் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் தனியார்மயம், ஒப்பந்த ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

மதுரை மாநகராட்சியிலும் தூய்மைப்பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் தூய்மைப் பணியாளர்களை கடுமையாக சுரண்டுவதை எதிர்த்து பல கட்டப் போராட்டங்கள் நடந்துள்ளன. தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மிகக்குறைந்த ஊதியத்தையே தொழிலாளர்களுக்கு வழங்குகின்றன. மேலும்  இந்தப் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர் களுக்கு எவ்வித சட்ட, சமூகப் பாதுகாப்பும் இல்லை. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மற்றும்  பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்ப தாகவும் அதற்கான பணிகள் துவங்கியுள்ளதாக வும் வெளியாகும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை கிண்டியில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இந்தப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அரசுத் துறைகளில் ஏற்படும் தற்காலிக பணியிடங்கள் - குறிப்பாக கணக்கு அலுவலர்,  டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் போன்ற பணிகள் தான் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுவதாகவும்; நிரந்தரப் பணியிடங்கள் வழக்கம் போல டிஎன்பி எஸ்சி மூலம் நிரப்பப்படும் என்றும் கூறப்பட்டா லும் நிரந்தர காலிப்பணியிடங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வெளி முகமைக்கு விடப்படுவது என்பது அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக சுகாதாரத்துறையில் வெளிமுகமை மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுவது அதிகரித்து  வருகிறது. நிரந்தரப் பணியில் உள்ளவர்கள்  போல வெளிமுகமை மூலம் நியமிக்கப்படுபவர் களுக்கு பணிபாதுகாப்போ, பொறுப்புணர்வோ, தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய அவ சியமோ இருக்கும் என்று கூற முடியாது. இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கவும் செய்யும். 

மேலும் தொகுப்பூதியம், மதிப்பூதியம், வெளிமுகமைப் பணி போன்ற ஏற்பாடுகள் சமூக நீதிக்கு எதிரானது; இதில் எந்தவிதமான இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படுவதில்லை. எனவே வெளிமுகமை என்பதை தமிழக அரசு  முற்றாக கைவிட்டு பணியிடங்களை தேர்வாணை யம் மூலம் நிரந்தர பணி இடங்களாக கருதி நிரப்புவது அவசியம். இது வேலைவாய்ப்பு தொடர்புடைய பிரச்சனை மட்டுமல்ல, சமூ கத்தின் எதிர்காலம் தொடர்புடையதும் ஆகும்.