headlines

img

நீலகிரிக்கு ஆபத்து

இயற்கை வளங்கள் அழிக்கப்படும்போது அதன் எதிரொலியாக புயல், மழை,வெள்ளம், நில நடுக்கம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  நீலகிரி மலை மாவட்டம் தற்போது அப்படியொரு ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

இம்மாவட்டத்திற்கு உள்பட்ட அவலாஞ்சி யில் கடந்த புதன்கிழமை 58.1 செமீ மழை பதி வானது. இது இந்த ஆண்டு இந்தியாவில் பதிவான அதிகபட்ச மழை அளவாகும். ஒரே இரவில் கூட லூரில் 335 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. வனப்பகு திகளிலும் மலையையொட்டியுள்ள சாலைகளி லும் ஏராளமான மரங்கள் முறிந்துவிழுந்துள்ளன. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் 2015ஆம் ஆண்டும் இதே போன்ற பெரிய இயற்கை சீற்றத்தைச் சந்தித்தது. அதன் பின்னரும் அரசும் நிர்வாகமும் விழித்துக் கொள்ளவில்லை.  எமரால்டு என்ற இடத்தில் அப்படியே ஆற்றில் வெள்ள நீர் போவதைப் போல நிலப்பரப்பு மிதந்தபடி பயணிக்கும் காட்சி பார்க்கவே அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மலைப்பகுதியில் அளவுக்கு அதிகமாக அமைக்கப்பட்ட சுற்றுலாவிடுதிகளும் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளுமே இதற்கு காரணம். பல இடங்களில் யானைகளின் பாதைகள் மறிக்கப்பட்டு சட்டவிரோதமாகச் சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.  இதுகுறித்த வழக்கு நீதிமன்றத் திற்குச் சென்றதால் அந்த விடுதிகளுக்கு சீல்வைக்கப்பட்டன.  

நீலகிரியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் யூக லிப்டஸ் மரங்களும் இயற்கை சீற்றங்களுக்கு ஒரு காரணமாகும். இம்மாவட்டத்தில்  பிரிட்டிஷ் ஆட்சியில், சீகை, யூகலிப்டஸ் மரங்கள் அதிகள வில் நடப்பட்டன. எரிபொருளுக்காகவும், அந்த மரங்களின் பட்டையிலிருந்து கிடைக்கும் ‘கேனின்’ என்ற தோல் பதனிடும் தொழிலுக்கான முக்கிய மூலப்பொருளுக்காகவும் அவை வளர்க்கப்பட்டு வந்தன.

சுதந்திரத்துக்குப் பின், இவ்வகை மரங்களை வெட்ட, பட்டையை உரிக்கத் தடை விதிக்கப் பட்டதால், மாவட்டம் முழுக்க உள்ள வனங்களில் சீகை, யூகலிப்டஸ் போன்ற அந்நிய மரங்கள் அகற்றப்படாமல் அதிகரித்தன.  இதைத் தொடர்ந்து, இவற்றை அகற்ற மலைப்பகுதி மேம் பாட்டுத் திட்டம், மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை சார்பில் நிதியுதவி வழங்கப் பட்டது. வனங்களை ஆக்கிரமித்துள்ள சீகை மரங்களை வேரோடு அகற்றி, அங்கு சோலை மரங்களை நடவு செய்யும் பணி துவக்கப்பட்டது. இப்பணிகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன.  

2015ம் ஆண்டில், மதுரை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள்,’மேற்குத் தொடர்ச்சி மலையில்,சோலை காடுகளைக் காப்பாற்ற யூகலிப்டஸ், சீகை, முள்மரங்களை அகற்ற உத்தரவிட்டனர். அதன்பின், வனத்துறை தாக்கல் செய்த மனுவில், ‘நீலகிரியில், 2019ம் ஆண்டுக்குள் முழுமையாக அகற்றப்படும்’ என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த உறுதி காப்பாற்றப்படவில்லை.  யூகலிப்டஸ் மரங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், மண்ணின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டு மண்சரிவு ஏற்படுகிறது.  இதனால், யூகலிப்டஸ் மரங்களைத் துரித கதியில் அகற்ற அரசு நடவடிக்கை எடுப்பதோடு சட்டவிரோத ஆக்கிர மிப்புகள் அகற்றப்படவேண்டும்.

;