headlines

img

நம்பிக்கை துரோகம் அதிமுக அரசு...!

மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை மோசடி செய்வதில் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஏற்கனவே தேர்தலின் போது மக்களுக்கு  அளித்த வாக்குறுதிகளில்ஒவ்வொன்றாக  மண்ணை வாரிப் போட்டு வருகிறதுமோடி அரசு. அடுத்த கட்டமாக மாநிலங்களுக்குஅளித்திருந்த அரசியல் சட்ட உத்தரவாதத்தையேகுப்பைத் தொட்டியில் வீசியிருக்கிறது.

நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பைச் சரிக்கட்டும் நோக்கில்5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றுகூறியது.  அதனை உறுப்படுத்தும் விதமாக   101-ஆவதுஅரசியல் சட்ட திருத்தமும்.  சரக்கு மற்றும் சேவைவரி (மாநிலங்களுக்கு ஈடு செய்தல்) 2017 சட்டமும் கொண்டு வரப்பட்டது. அதனை நம்பியே மாநிலஅரசுகள்  ஜிஎஸ்டி சட்டத்தை சட்டமன்றத்திலும் நிறைவேற்றி ஒப்புதல் தெரிவித்தன. 

ஆனால் மத்திய மோடி அரசு சொன்னது போல் ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும்வருவாய் இழப்பீட்டு தொகையை இதுவரை முழுமையாக தரவில்லை. 2017 முதல் 2019 வரை மட்டும்1 லட்சத்து 51 ஆயிரத்து 365 கோடி பாக்கியிருக்கிறது. மாநிலங்களுக்கு இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்பதற்காக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டிஇழப்பீடு வரியை, வருவாய் இழப்பினை ஈடுசெய்யும் நிதியத்திற்கு அனுப்பி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் மோடி அரசு நயவஞ்சகமாக அந்த  நிதியை அப்படியே மத்திய அரசின்தொகுப்பு நிதிக்கு மாற்றியிருக்கிறது. இதனை சமீபத்தில் மத்திய தலைமை கணக்கு தணிக்கைஅதிகாரியின் (சிஏஜி) அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. 

101 வது அரசியல் சட்டத்திருத்தத்தையும்மீறி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கான இழப்பீட்டு நிதி ரூ. 47 ஆயிரத்து 272கோடியை வேறு விவகாரங்களுக்கு பயன்படுத்தியிருக்கிறது. இது ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் சட்டத்தை அப்பட்டமாக மீறிய செயல் ஆகும். இதே போல் பல்வேறு வரிகளின் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை ரூ. 3 லட்சம் கோடியை அந்தநோக்கத்திற்கு மாறாக மத்திய அரசு மடைமாற்றம் செய்திருக்கிறது என்கிறது சிஏஜிஅறிக்கை. மோடி அரசின் இந்த நடவடிக்கைமாநிலங்களுக்கு எதிரான மிகப்பெரிய நம்பிக்கை மோசடி ஆகும். மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்கும் போது உறுதியேற்றுக்கொண்ட அரசியல்சாசன விழுமியங்களுக்கு எதிரான செயல் ஆகும்.

ஜிஎஸ்டி இழப்பீடாக தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.  12 ஆயிரத்து 250 கோடியை மோடிஅரசு தரமறுக்கிறது. இதனை கேட்டுப் பெற முதுகெலும்பற்ற அதிமுக அரசு, தங்களின் பதவி சுகத்திற்காக மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக விட்டுக்கொடுத்து வருகிறது. புதிய வேளாண்சட்டம், ஒரே ரேசன் கார்டு, புதிய கல்விக்கொள்கை என மாநிலங்களை ஒன்றிய அரசின்நிரந்தர கொத்தடிமையாக்கும் திட்டங்களை,  அதிமுக தலைமையிலான தமிழக அரசு ஆதரித்து, பாஜகவோடு சேர்ந்து தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து வருகிறது.
 

;