முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். அவர் வெளிநாட்டு பய ணத்தில் இருக்கும் போது தமிழகத்தில் அவரது பொறுப்புகளை கவனித்துக் கொள்வதற்காக அவரது துறைகள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடமோ இதர அமைச்சர்களிடமோ பகிர்ந்தளிக்கப்படும் என்று இதுவரை எந்த அறி விப்பும் வரவில்லை. வெளிநாட்டில் இருந்தவாறே முடிவெடுத்து அதிகாரிகளுக்கு அவர் அறி விப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசுத்தலைவர்கள் வெளிநாட்டு பய ணத்தில் இருக்கும் போது அவரது பொறுப்பு கள் தற்காலிகமாக சக அமைச்சர்களிடம் பகிர்ந்த ளிக்கப்படுவது தமிழகத்தில் ஐம்பது ஆண்டுக ளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்படுகிற ஒரு நடைமுறையாகும். இதற்கு பல்வேறு உதாரணங்க ளை சொல்லலாம். 1968 ஏப்ரலில் அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா ஒருமாத காலம் அமெரிக்கா சென்றபோது, அமைச்சர்கள் நெடுஞ்செழியன், கருணாநிதி உட்பட நான்கு பேரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சென்றார். 1970 ஜூலையில் முதல்வராக இருந்த கருணாநிதி ஐரோப்பிய பயணம் மேற்கொண்ட போது, நெடுஞ்செழியன் உட்பட ஆறு அமைச்சர் களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சென்றார். 1978 அக்டோபரில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அமெரிக்கா சென்றபோது, நாஞ்சில் மனோகரன் உள்ளிட்ட ஆறு அமைச்சர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இப்படி நீள்கிற வரலாறு 2016 அக்டோபரில் முதலமைச்சர் ஜெய லலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது பொறுப்புகள் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக் கப்பட்டது வரை நடந்திருக்கிறது. இப்போது முதலமைச்சர் பழனிசாமி இந்த நடைமுறையை பின்பற்றாதது என்ன கார ணத்தால் என்று தெரியவில்லை. துணை முதல மைச்சராக இருக்கிற ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சக அமைச்சர்கள் மீதான நம்பிக்கையின்மை காரணமா அல்லது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு திரும்பி வரும் போது நிலைமை மாறி விடுமோ என்ற அச்சம் காரணமா என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
முதல்வரின் இந்த பயணம் குறித்து வேறு சில தகவல்களும் உள்ளன. அவருடன் அமைச்சர்கள் விஜய பாஸ்கர், எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் அரசு செயலாளர்களும் செல்கின் றனர். பயணத்தின் அடிப்படை நோக்கம் முத லீட்டாளர் சந்திப்பு என்று சொல்லப்பட்டிருக்கி றது. முதல்வருடன் ஒரு படையே சென்றாலும் அவர்கள் முதல்வருடன் ஒன்றாக பயணிக்கவோ, தங்கவோ போவதில்லை என்று கூறப்படுகிறது. மறுபுறம் முதல்வர் பழனிசாமி லண்டனில் இறங்குகிற அதே நேரத்தில் கொல்கத்தாவிலி ருந்து அவரது மகன் மிதுனும் லண்டனில் இறங்கு கிறார். சில தொழிலதிபர்களும் மிதுனுடன் செல் கிறார்கள். இந்த பயணங்களின் பின்னணியில் இருப்பது என்ன? சக அமைச்சர்களுக்காவது உண்மைகள் தெரியுமா என்ற கேள்விகள் துரத்துகின்றன.