ஒன்றிய அரசின் 16ஆவது நிதி ஆணையக் குழுவினர் நான்கு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளனர். அரவிந்த் பனகாரியா தலைமை யிலான இந்தக் குழுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழக அரசு சார்பி லான கருத்துக்களை முன் வைத்துள்ளார். தற்போ தைய வரி பகிர்வு முறை தமிழ்நாடு போன்ற முன் னேறிய மாநிலங்களை தண்டிப்பது போல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
15ஆவது நிதிக்குழு வரிப் பகிர்வில் மாநிலங்க ளின் பங்கை 41 சதவீதமாக உயர்த்தியது பொருத்த மானது என்ற போதும் இந்த அறிவிப்புக்கு மாறாக தமிழ்நாட்டிற்கு 33.16 சதவீதம் மட்டுமே கிடைத் துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பேரிடர் துயர் துடைப்புப் பணிக்காக உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என நிதி ஆணையம் பரிந்து ரைக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதியை நிதி ஆணை யம் சரி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப் பிட்டுள்ளது முற்றிலும் நியாயமானது..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதி ஆணையத்திடம் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நலத்திட்டங் களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதால் மாநில அரசுகளின் செலவு அதிகரித்துக் கொண்டே போவதை சுட்டிக்காட்டியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழ்நாடு, கேரளம் போன்று சிறப்பா கச் செயல்பட்டு சாதனை படைக்கும் மாநிலங் கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆனால் ஊக்க மளித்தலின் வரையறையை ஒன்றிய அரசு தீர்மா னிப்பது என்பது பொருத்தமற்றது; மாநில உரிமைக ளைப் புறந்தள்ளுவது என கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் மாநிலங்க ளுக்கு நெருக்கடி அதிகரித்துக் கொண்டே செல் கிறது. மாநிலங்களின் வரி வருவாயில் சுமார் 45 சதவீதம் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளை நிதி ஆணையம் வகுத்துள்ளது பொருத்தமற்றது என்பதை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மொத்த வரி வசூலில் மாநிலங்களின் பங்கு குறைந்தபட்சம் 50சதவீதம் அளவுக்கு உயர்த்தப் பட வேண்டும் என்பதை தமிழக முதல்வர் வலி யுறுத்தியுள்ளார். இதே கோரிக்கையை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அழுத்தமாக வற்புறு த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி குறைந்த மாநிலங்களுக்கு கூடு தல் நிதி என்பது நியாயமான ஒன்று. ஆனால் அது தமிழ்நாடு, கேரளம் போன்ற வளர்ச்சிய டைந்த மாநிலங்களுக்கு தண்டனையாக அமைந்துவிடாமல் ஒன்றிய அரசு அதற்கான தொகையை அளித்திட வேண்டும். நம்முடைய அரசியல் சாசனம் கூட்டாட்சி முறையை அடிப்ப டையாகக் கொண்டுள்ளது. நிதி ஆணையத்தின் பரிந்துரைகளும் அதனடிப்படையில் அமைந்திட வேண்டும்.