headlines

img

அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!

உலகின் மூன்றாவது பொருளாதாரம் எனும் நிலையை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டி ருப்பதாக ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் பீற்றிக் கொண்டிருக்கிறார்கள். பத்தாண்டு கால ஆட்சியில் 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டு விட்டதாகவும் அள்ளி விடுகிறார்கள். ஆனால் உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டிய லில் 127 நாடுகளில் இந்தியா 105 ஆவது இடத்தில் இருக்கிறது என்பது அவமானமாக இருப்ப தில்லை ஆட்சியாளர்களுக்கு. அது மட்டுமின்றி இந்தியாவின் 5 வயதுக்குட்பட்ட 13.7 கோடி குழந்தைகளில் 35 சதவீதம் பேர் வளர்ச்சிக் குறை பாடுள்ளவர்கள் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் கள் வேதனைக்குரியவை. ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியவை.

இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியா மோச மான நிலையில் இருக்கிறது என்பதுதான். ஆப்பி ரிக்காவின் தென்பகுதி நாடுகளான சப்-சஹாரா பகுதியில் உள்ள நாடுகளை விட இந்தியா குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாடு விகிதத்தில் மோசமாக உள்ளது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகும். இந்தியாவில் ஐந்து வயதுக்குட் பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை  வளர்ச்சிக் குறைபாடுடையவை என்கிறது ஓர்  ஆய்வு. இந்த ஆய்வு உயரக் குறைபாடு ஒன்றை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது.  இதர காரணிகளையும் எடுத்தால் அவை இன்னும் அதிர்ச்சியளிக்கும் உண்மை நிலையை நமக்கு உணர்த்திடும்.

அசோகா பல்கலைக்கழகத்தின் அஸ்வினி தேஷ்பாண்டே, மலேசிய மோனாஷ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ராஜேஷ் ராமச்சந்திரன் நடத்திய இந்த ஆய்வு மேலும் சில அதிர்ச்சி யான விஷயங்களை குறிப்பிடுகிறது. இந்தியா வில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டில் சமூக அடையாளம் குறிப்பாக சாதி அடையாளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது உயர் சாதிக் குழுக்களின் குழந்தைகள், சாதிக் கட்டமைப்பின் அடிமட்டத்தில் இருக்கும் குழந்தைகளைக் காட்டிலும் வளர்ச்சிக் குறைபாடு அபாயம் 20 சத வீதம் குறைவாக உள்ளது என்றும் கூறுகிறது.

70 ஆண்டுகளாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் இந்தியாவின் சாதிய மைப்பு அதாவது இந்து மதத்தை அடிப்படை யாகக் கொண்ட 4 அடுக்கு அமைப்பு வேரூன்றி யுள்ளதால் குழந்தைகள் மத்தியில் காணப்படும் வேறுபாடுகளும் மாறவில்லை என்றும் குறிப்பிடு கிறது அந்த ஆய்வு. 5 வயதுக்குட்பட்ட குழந்தை களில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தவர் என்பது கவனத்தில் கொள் ளத்தக்கது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர் கள், கல்வியறிவு குறைந்தவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் வளர்ச்சி குறை பாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெளி வாக்குகிறது இந்த ஆய்வு. பாஜக ஆட்சியாளர்க ளும்  மோடியும் வளர்ச்சி, வளர்ச்சி  என்கிறார்களே இந்த வளர்ச்சி யாருக்கானது என்பதையும் இவர்க ளின் இந்துத்துவா அரசியல் எத்தகையது என்ப தையும் இந்த ஆய்வு அம்பலப்படுத்துகிறது.