headlines

img

ஏகாதிபத்தியத்தின் வெறி 

 ஈரான் ராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி மற்றும் ஏழு ராணுவ உயரதிகாரி கள், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளியன்று அதிகாலை, ஆளில்லா விமானம் மூலம் செலுத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம், ஒட்டுமொத்த உலகினையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது அமெரிக்க ஏகாதிபத்தியம் வெறித்தனமாக அரங்கேற்றியுள்ள, ரத்தத்தை உறையச் செய்கிற கொடிய சம்பவமாகும்.  ஈரான் அரசின் ஜனாதிபதிக்கு அடுத்த இரண்டாவது சக்தி வாய்ந்த நபர் ஒருவரை குறி வைத்து படுகொலை செய்திருப்பது என்பது,  ஈரான் மீதான நேரடியான யுத்தமே ஆகும். இதன்மூலம், ஈரான் மீது மட்டுமல்ல; ஒட்டு மொத்த மத்திய ஆசிய பிராந்தியத்தின் மீதும் அமெரிக்கா தாக்குதலைத் துவக்கியுள்ளது எனக் கூறலாம்.  இப்பிரச்சனை குறித்து மாஸ்கோவுடனும் பெய்ஜிங்குடனும் டெஹ்ரான் ஆலோசிக்கத் துவங்கியுள்ளது. பதிலடி என்ற நிலை வந்தால் அப்பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதி லும் ஒரு பதற்றச்சூழல் ஏற்படும்.  ஜெனரல் சுலைமானியின் படுகொலை என்பது, ஈவிரக்கமற்ற கொடிய குற்றங்களை நிகழ்த்துவது; அதன்மூலம் நாடுகளையும் வளங்களையும் கைப்பற்றுவது என்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் உச்சக் கட்டமே ஆகும். இதற்கு முன்பு, பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி ஒசாமா பின்லேடனை அழிப்பதாகக் கூறி, அமெரிக்க ஏகாதிபத்தியம் துவக்கிய தாக்குதல்கள், அடுத்தடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒழிப்பதற்காக தீவிரப்படுத்தப் பட்டன. சதாம் உசேன், தூக்கிலிட்டு படுகொலை செய்யப்பட்டார். மும்மர் கடாபி கொடூரமாக கொல்லப்பட்டு சாக்கடையில் தூக்கிவீசப்பட் டார். ஜனாதிபதி சாவேஸ், மெல்லக்கொல்லும் புற்றுநோயின் பிடியில் சிக்கவைக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டார். அவருக்கு முன்பு  யாசர் அராபத்துக்கும் இதே கதிநேர்ந்தது. உல கெங்கிலும் ஜனநாயகத்தை பரப்புவதாகக் கூறி பயங்கரவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் ஏற்றுமதி செய்திருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.  சிஐஏ, எப்பிஐ போன்ற அமெரிக்காவின் நாசகர உளவு ஸ்தாபனங்களின் கொலைப்பட்டி யல் நீள்கிறது. ஜனாதிபதி பசார் அல் அசாத், ஜனாதிபதி கிம் ஜோங் உன், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, ஜனாதிபதி ஈவோ  மொரேல்ஸ் என எல்லோரும் குறிவைக்கப்பட்டி ருக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிராட்டங்களைக் கவனித்தால் அது புரியும்.  தனிப்பட்ட தலைவர்களை மட்டுமல்ல, அவர்கள் சார்ந்துள்ள தேசங்களின் லட்சக்கணக் கான மக்களை கடந்த 20 ஆண்டுக்காலத்தில் கொன்று குவித்துள்ள அமெரிக்கா, 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டின் நிறைவு ஆண்டையும் கொடூரமாக துவக்கி வைத்திருக்கிறது. ஆனால் இந்த நாடு களின் மக்களெல்லாம் - குறிப்பாக உழைக்கும் வர்க்க மக்கள் கோடிக்கால் பூதமென எழு கிறார்கள். அமெரிக்கா உள்பட உலகெங்கிலும் போராட்ட அலை தீயாகப் பற்றிப் பரவுகிறது. இது நிச்சயம் ஏகாதிபத்திய பயங்கரத்திற்கு ஒரு நாள் முடிவு கட்டும்.