அதிகாரப் பசிக்கு பலியான அஜித்குமார்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் என்ற 29 வயது இளைஞர், போலீஸ் சித்ரவதை யில் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ தற்போது தாக்கல் செய்துள்ள அறிக்கை, காவல் துறைக் குள் நிலவும் கோர முகத்தை மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியிருக்கிறது. அஜித் குமார் எந்தத் திருட்டிலும் ஈடுபடவில்லை என்றும், அவர் மீது சுமத்தப்பட்டது அப்பட்ட மான பொய்ப் புகார் என்றும் சிபிஐ திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளது. ஒரு சாமானிய இளை ஞனைத் திருடன் என முத்திரை குத்தி, விசா ரணை என்ற பெயரில் அடித்துக் கொன்ற இந்தச் செயல், சட்டத்தின் ஆட்சியில் நிகழ்ந்த ஒரு படு கொலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
இந்த வழக்கின் வேர், பேராசிரியர் நிகிதா என்பவர் அளித்த ஒன்பது சவரன் நகை திருட்டு புகாரில் தொடங்குகிறது. எந்தவித முகாந்திரமும் இன்றி, வெறும் சந்தேகத்தின் பெயரிலும் செல் வாக்கின் அடிப்படையிலும் ஒரு இளைஞரைத் தூக்கிச் சென்று துடிதுடிக்கக் கொல்வதற்கு இந்த அதிகார வர்க்கத்திற்கு யார் துணிவு கொடுத்தது? தற்போது சிபிஐ சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஸ்ரீமதி எழுப்பியுள்ள கேள்வி மிக முக்கியமானது. எந்தக் குற்றமும் செய்யாத ஒருவர் கொல்லப்படுவதற்கு, அந்தப் பொய்ப் புகாரை அளித்தவரும் ஒரு முக்கியக் காரணம்தானே? அஜித்குமாரின் மரணத்திற்கு சம்பந்தப்பட்ட காவலர்கள் மட்டுமே பொறுப் பல்ல; அந்தப் பொய்ப் புகாரைச் சுமத்திய நிகிதா வும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
அஜித்குமாரின் தாய் மாலதி இன்று எழுப்பும் கதறல் நியாயமானது. தனது மகன் திருடன் இல்லை என்பது உலகிற்குத் தெரிந்துவிட்டா லும், அவனை மீட்டெடுக்க முடியாது என்கிற ரணம் ஒருபுறம், அந்தப் பொய்ப் புகாருக்குப் பின்னால் இருக்கும் ‘பெரிய இடத்து’ நபர்கள் யார் என்கிற சந்தேகம் மறுபுறம் அவரை அலைக்கழிக்கிறது. கைதான காவலர்கள், “பெரிய இடத்து உத்தரவு” என்று சொல்வது யாரை? அதிகார மட்டத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் இழைக்கும் அநீதிக்கு ஒரு ஏழை இளைஞரின் உயிர்தான் விலையா? பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு அதிகபட்ச இழப்பீடு வழங்குவதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய அத்தனை நபர்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும்.
இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிச் சத்திற்கு வரத் தொடங்கியதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்புவனத்தில் முன்னெ டுத்த தீரமிக்க போராட்டங்களே அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. ஒரு எளிய குடும்பத் திற்காக வீதியில் இறங்கிப் போராடினால் மட்டுமே, அதிகார வர்க்கத்தின் கதவுகள் திறக்கும் என்பதற்கு இந்த வழக்கு மற்றுமொரு சாட்சி. அஜித்குமார் திருடன் அல்ல, அவர் அதிகார ஆணவத்தால் கொல்லப்பட்ட ஒரு நிரபராதி. இந்தத் தீர்ப்பு காவல்துறைக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
