வறுமையும் போர்களும் 200 கோடி பெண்களின் துயரம்
சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டப் பட்டுள்ள நிலையில், ஐ.நா. அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் பெண்கள் நிலை பெரும்பாலும் கவலையளிக்கக் கூடிய வகையிலேயே இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஆண்டில் மட்டும், உலகம் முழுவதும் உள்ள 25 சதவிகித நாடுகளில் பெண்களின் உரிமை கள் மோசமாக பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2010 மற்றும் 2023-க்கு இடையில் சமூகப் பாது காப்புப் பலன்களைக் கொண்ட பெண்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் தான் அதிகரித்துள்ளது, இன்னும் உலகம் முழு வதும் பெண்கள் - சிறுமிகள் என 200 கோடி பேர் சமூகப் பாதுகாப்புப் பலன்கள் இல்லாத நிலையில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
வேலைவாய்ப்புகளில் உள்ள பாலின இடை வெளிகள் கடந்த பத்தாண்டுகளாக தேக்க மடைந்துள்ளது. 25 முதல் 54 வயதுக்குட்பட்ட பெண்களில் 63 சதவிகிதம் பேர் மட்டுமே ஊதியம் பெரும் வேலை செய்கின்றனர்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் போர்க் கால சூழலில் பாலியல் வன்முறைகள் 50 சத விகிதம் அதிகரித்துள்ளன; இதில் பாதிக்கப்பட்ட வர்களில் 95 சதவிகிதம் பேர் குழந்தைகள் அல்லது இளம் பெண்களாக உள்ளனர் என்று ஐ.நா. பெண்கள் அறிக்கை தெரிவிக்கிறது
023-இல் 61.2 கோடி பெண்கள், போர் நடக்கும் 50 கிலோமீட்டருக்குள் மிக மோசமான சூழ லில் வாழ்ந்துள்ளனர். 2010-இல் இருந்த எண்ணிக் கையை விட இது 54 சதவிகிதம் அதிகமாகும்.
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள 12 நாடுகளில் குறைந்த பட்சம் 53 சதவிகித பெண்கள் இணையதளத்தின் மூலமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் இன்னும் தொடர்வது டன் ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளது.
மூன்று பெண்களில் ஒருவர் அவர்களின் வாழ்நாள் முழுவதும் நெருங்கிய உறவினரால் உடல் ரீதியான வன்முறை அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் அல்லது நெருங்கிய உறவுகள் அல்லாத நபர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும் ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
இத்தகைய பின்னணியில் உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் கண்ணியமான வாழ்க்கையை யும் உறுதிப்படுத்துவதற்கான நீண்ட நெடிய போராட்டத்தில் இடதுசாரிகளே முழுமையாக ஈடு பட்டுள்ளனர். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்க ளும் ஒன்றுபட்டு குரல் எழுப்புவது அவசியம்.