headlines

img

கொடிய உண்மை முகம்!

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது.  இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறிய தற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறி யிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என அம்பேத்கர் மீதான தனது கொடிய வெறுப்பையும், வெறித்தனமான வன்மத்தையும் கக்கியுள்ளார். 

இது அமித்ஷாவிற்கு மட்டுமல்ல; ஆர்எஸ் எஸ் வகையறாக்களுக்கு இருக்கும் சித்தாந்த ரீதியான வெறுப்பின்  வெளிப்பாடே ஆகும். அம்பேத்கர் முன் வைக்கும் சமத்துவத்தை எந்த காலத்திலும் ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்ட தில்லை. பிறப்பால் ஏற்றத்தாழ்வு (சாதி, மதம்) என்பது அடியோடு அகற்றப்பட வேண்டும் என  அம்பேத்கர் முழங்கினார். ஆனால் அதே கால கட்டத்தில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கி (ஆர்எஸ்எஸ்)  தலைவராக இருந்த மாதவ் சதாசிவ் கோல்வால்கர் பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பது ‘இயற்கையானது’ அது  நிலைத்து நிற்க வேண்டும் எனக் கூறினார்.

இன்று நேற்றல்ல, அம்பேத்கர் பெயரைக் கேட்டாலே ஆர்எஸ்எஸ்-க்கு  என்றுமே வேப்பங் காயாக கசந்திருக்கிறது  என்பதுதான் வரலாறு. 1950களில் சட்ட அமைச்சராக இருந்த  அம்பேத் கர், ஹிந்து கோட் பில் இயற்றுவதன் மூலம் இந்து  தனிநபர் சட்டங்களைச் சீர்திருத்த முயன்றார். அப்போது ஆர்எஸ்எஸ்சில் இருந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி  உள்ளிட்ட சனாதன வாதிகள் கடு மையாக எதிர்த்தனர்.  இந்து மதத்தினுள் பாலின சமத்துவத்தை அனுமதிக்கவும் மறுத்தனர். அம் பேத்கரின் ஒவ்வொரு சீர்திருத்த முயற்சிக்கும் முட்டுக்கட்டை போட்ட போதுதான் அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத னால்தான் “ஆர்எஸ்எஸ் ஒரு ஆபத்தான அமைப்பு”  (அம்பேத்கர் தொகுதி 15)  எனத் தனது பேச்சில் எச்சரித்துள்ளார்.

மனுஸ்மிருதியை பின்பற்றுபவர்களால் ஒரு போதும் அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்க முடியாது. அதன் அப்பட்டமான சாட்சியம் தான் அமித்ஷா!