பசியை ஆயுதமாக்கிய ஏகாதிபத்திய பயங்கரம்
மத்திய கிழக்கில் முதல் முறையாக அதிகாரப்பூர்வ பஞ்ச அறிவிப்பு என்பது வெறும் தலைப்புச் செய்தியல்ல - இது மனித குலத்தின் முகத்தில் அறையப்பட்ட அவமானச் சின்னம். காசாவில் ஐம்பது லட்சம் மக்கள் பஞ்ச த்தில் வாடும்போதும் அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் அரசியல் விளையாட்டுகள் தொடர்கின்றன.
1946-லிருந்து இஸ்ரேலுக்கு 228 பில்லியன் டாலர் இராணுவ உதவி - உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகை. 2022 அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகு மட்டும் 17.9 பில்லியன் டாலர் - இதுவரை எந்த ஆண்டையும்விட அதிகம். இந்த ஆயுதங்களால் நடைபெறும் முற்றுகையின் பின்னணியில் சின்னஞ்சிறு குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர்.
பிப்ரவரியில் 2000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், ஜூலையில் 12000 - இந்த எண்களின் பின்னால் ஒவ்வொரு தாயின் கண்ணீரும், ஒவ்வொரு தந்தையின் அவலமும் உண்டு. காசா நகரில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு இரண்டு மாதங்களில் நான்கு மடங்கு அதி கரித்து 16.5 சதவீதத்தை எட்டியுள்ளது.
3,20,000 குழந்தைகள் - காசாவின் ஐந்து வயதுக்கு உட்பட்ட முழு மக்கள்தொகையும் - கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டு அபாயத்தில் சிக்கியுள்ளனர்.
“நாளை நாங்கள் என்ன சாப்பிடுவோம் என்று தெரியவில்லை” - சமாஹர் அபு ஹசிராவின் இந்த வார்த்தைகள் வாஷிங்டனிலும் டெல் அவிவிலும் உள்ள அரசியல்வாதிகளின் காதுகளில் எதிரொலிக்கவில்லையா?
காசாவின் 70 சதவீத அடிப்படை கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. 98 சதவீத விவசாய நிலம் சேதமடைந்துள்ளது. ஊட்டச்சத்து சிகிச்சை மையங்களில் வெறும் 15 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது. இந்த நிலையில் 1,32,000 குழந்தை கள் மரண ஆபத்தில் உள்ளனர்.
உதவி வாகனங்கள் கொள்ளையடிக்கப் படுவதையும், உணவு விநியோகம் தடைபடுவதை யும் பார்த்துக்கொண்டு “பாதுகாப்பு” என்ற பெய ரில் மௌனம் காக்கும் சர்வதேச சமூகம் உண்மை யில் எதைப் பாதுகாக்கிறது? மூன்றில் ஒரு பகுதி யினர் தொடர்ந்து பல நாட்கள் உணவின்றித் தவிக்கின்றனர்.
வல்லரசு நலன்களுக்காக மக்களை பஞ்சத் தில் தள்ளுவது மனிதகுலத்தின் மீதான குற்றம். ஜனநாயகம், மனித உரிமைகள் என்று பேசும் நாடுகள் இந்த அவலத்திற்கு உடந்தையாக இருப்பது வரலாறு மன்னிக்காத பெருங்குற்றம்
இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கப்படும் ஒவ்வொரு குண்டும், ஒவ்வொரு புல்லட்டும் பாலஸ்தீன மக்களின் இரத்தத்தில் தோய்ந்தவை.
காசாவின் குழந்தைகள் இன்று பட்டினியால் வாடுகிறார்கள் என்றால், நாளை உலகின் எந்த மூலையில் உள்ள குழந்தைகளும் இதே கதியை சந்திக்கலாம்.
ஏகாதிபத்தியத்தின் கொடுமை களை எதிர்த்து மேலும் வலுத்துக் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.