இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு நூறு நாட்களை கடந்துள் ளது. இந்த நூறு நாட்களில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று மோடி பெரு மிதப்பட்டுள்ளார். மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் இதனால் மகிழ்ச்சியடைபவர்கள் கார்ப்பரேட் முதலாளிகளும், இந்துத்துவா பிற்போக்காளர்க ளுமே தவிர நாட்டு மக்கள் அல்ல.
நாடாளுமன்ற மக்களவையில் பெரும் பான்மையையும் மாநிலங்களவையில் செயற் கையாக உருவாக்கப்பட்ட பெரும்பான்மை யையும் கொண்டுள்ள தைரியத்தில் அடுத்த டுத்து பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. ஆனால் இந்த மசோதாக்கள் எதுவும் நாட்டு மக்களின் நலனை குறிக்கோளாக கொண்டவை அல்ல. மாறாக, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவும், கார்ப்பரேட் முதலாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவுமே சட்டமாக்கப்பட்ட மசோதாக்கள் ஆகும்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கு வதற்கான மசோதா குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறி வைத்து முத்தலாக் தடைச் சட்டமசோதா கொண்டு வரப்பட்டது. அதே நோக்கத்தோடுதான் ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி யதும், அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்ததும் ஆகும். என்ஐஏ சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களும் சிறு பான்மை முஸ்லிம் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அச்சுறுத்துவதற்காகவே நடை பெற்றவை ஆகும்.
மறுபுறத்தில் தொழிலாளர் நலச் சட்டங்க ளை இணைத்து நீர்த்துப் போகச் செய்தது, மோட்டார் வாகன திருத்தச் சட்டம் உள்ளிட்ட திருத்தங்கள் தொழிலாளர் உரிமைகளை பறிக்க வும், கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை யை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கவும் கொண்டு வரப்பட்டவையே ஆகும்.
சுதந்திர இந்தியா இதுவரை சந்தித்திராத வகையில் மிகப்பெரும் பொருளாதார நெருக்க டியை சந்தித்து வருகிறது. எட்டு முக்கிய துறை களில் பொருளாதார வளர்ச்சி இரண்டு சதவீதத் திற்கும் குறைவாகவே உள்ளது. வாகன உற்பத்தித் துறை மிக மோசமான சரிவை சந்திக்கிறது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து வீதிக்கு விரட்டப்படுகின்றனர். ஜிடிபியும் ஐந்து சதவீதத்திற்கும் கீழே செல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது. ஆனால் இதை சமாளிக்க எந்தத் திட்டமும் மோடி அரசிடம் இல்லை. மாறாக ரிசர்வ் வங்கி பணத்தை சூறையாடுவது, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு என போகாத ஊருக்கு ஆகாத வழியை தேடுகின்றனர் மத்திய ஆட்சி யாளர்கள். இந்த லட்சணத்தில் தன்னுடைய நூறு நாள் ஆட்சிக் குறித்து மோடி பெருமிதம் கொள்வது அவக்கேடானது.