headlines

img

லடாக் : மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்

லடாக் : மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை உடைத்து, அந்த மாநிலத்திற்கு அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டிருந்த அந்தஸ்தை பறித்தது மோடி அரசு. ஆர்எஸ்எஸ் திட்டத் தின்படி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை தன்னு டைய மிகப் பெரிய சாதனையாக பீற்றிக் கொண் டார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்டவோ, வளர்ச் சியை உறுதி செய்யவோ எந்த உருப்படியான நடவ டிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும்  மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற உறுதி மொழியை மோடி அரசு நிறைவேற்ற மறுக்கிறது. இந்தப் பின்னணியில் லடாக் யூனியன் பிரதேச பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரியும், வடகிழக்கு மாநிலங்களைப் போன்று லடாக் பகுதியை  அரசியல் சட்டத்தின் 6ஆவது அட்டவணையில் சேர்க்கக் கோரியும், லடாக் பகுதி மக்கள் தொ டர்ந்து போராடி வந்தனர். போராடுபவர்களோடு நியாயமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்காமல் ஒன்றிய அரசு இழுத்தடித்து வந்தது.

கடந்த மூன்றாண்டுகளில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளின் போது ஒன்றிய அரசின் பிடிவா தத்தால் உரிய தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இவர்களில் இருவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எல்ஏபி அமைப்பின் இளைஞர் பிரிவு போராட் டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனை ஒடுக்க முயன்ற யூனியன் பிரதேச நிர்வாகமும், ஒன்றிய அரசும் பிரச்சனையை முறையாக கையா ளாததால் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல் லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம டைந்தனர்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் சித்து விளையாட்டுகளால் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்த னர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்ட அமைப்பினரோடு, ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டிருந்தால் இத்தகைய வன்முறை வெடித்திருக்காது.

மணிப்பூரில் இனப் பகைமையை தூண்டி விட்டு பெரும் வன்முறைக்கு காரணமாக அமைந்த ஒன்றிய அரசின் அத்தகைய அணுகு முறை தான் இன்றைக்கு லடாக்கில் நடைபெறும் வன்முறைகளுக்கும் காரணமாகும். ஜம்மு- காஷ்மீர் மாநில பிரச்சனையை கையாளுவதில் ஒன்றிய அரசு முழு தோல்வியடைந்துவிட்டது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை உடைத்து இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது நிலை மையை மேலும் சிக்கலாக்கிவிட்டது. லடாக்கில் அமைதி திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதோடு, நிரந்தர தீர்வு காணப்படுவதும் அவசியமாகும்.