மோடியின் ‘வரலாற்றுச் சாதனை’!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வீழ்ச்சியடைந்திருக்கிறது. பிரதமராக மோடி பதவியேற்றபோது 58.58 ஆக இருந்த டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, தற்போது 88.8 ஐத் தாண்டியிருக்கிறது. அதாவது மோடி ஆட்சியில் ரூபாயின் மதிப்பு 46 சதவீ தத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த வீழ்ச்சி, கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி யில் ஏற்பட்ட சரிவை விட, மோடி அரசின் 10 ஆண்டு காலத்திலேயே நடைபெற்றிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில், இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு அப்போதைய காங்கிரஸ் அரசின் ஊழலையும், திறமையற்ற தலைமையுமே முக்கிய கார ணங்கள் என்று கூறினார். தற்போது அதையும் மிஞ்சியிருக்கிறது மோடியின் ஆட்சி என்பதை அவரின் கூற்றே உறுதிப்படுத்துகிறது.
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வயதைக் கடந்து ரூபாய் பலவீனமடைந்துவிட்ட தாக மோடி கிண்டல் செய்தார். ஆனால் தற்போது மோடியின் வயதைவிட கூடுதலாக 13 ரூபாய் பலவீனமடைந்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 35-40 வரை உயரும் என பாஜக தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். அதே போல் சிட்டி பேங்க் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடி ஆட்சி, இந்திய ரூபாய் “கேம் சேஞ்சர்” ஆக மாறும் என்றனர். அவர்கள் எல்லாம் தற்போது எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை.
எங்கள் ஆட்சியில் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது; விரைவில் மூன்றாவது இடத்தை அடையும் என மோடி மூச்சு விடாமல் பேசி வந்தார். உலகின் முதல் நான்கு பொருளாதாரங்களான அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பானின் நாணயங்கள் சர்வதேச சந்தைகளில் தங்கள் மதிப்பைப் பெரும ளவில் இழக்கவில்லை. ஆனால், இந்திய ரூபா யின் தொடர்ச்சியான வீழ்ச்சி இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சி எந்தளவிற்கு உறுதியற்றதாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
அண்மையில் சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு செய்யப்பட்டாலும், ரூபாயின் வீழ்ச்சியால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்க ளின் விலை உயர்ந்து, மக்களுக்கு குறைந்த பட்ச நன்மை கூட கிடைக்காத நிலையே உருவாகி யிருக்கிறது. ரூபாய் வீழ்ச்சி எளிய மக்களின் வீட்டுச் செலவை கடுமையாக பாதிக்கிறது. மளிகைப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங் கள், உடைகள் விலை உயர்வு, குடும்பங்களின் வாங்கும் திறனை குறைக்கிறது.
இந்திய ரூபாயின் தற்போதைய நெருக்கடி என்பது சர்வதேச காரணிகளால் மட்டும் ஏற்பட்ட தல்ல; ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அதில் மாற்றம் ஏற்படாத வரை ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்தின் எதிர் காலத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.