headlines

img

நாம் செல்லும் சாலை நமதில்லை என்பதறிக!

நாம் செல்லும் சாலை நமதில்லை என்பதறிக!

நாடு முழுவதும் சுங்கக் கட்டண வசூல் அதிக ரித்துள்ளது. கடந்த 2023 - 24ஆம் ஆண்டில் ரூ.64,809,86 கோடி வசூலாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதிகம் என்று ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பெருமைபொங்க தெரிவித்துள்ளார். தனது சொந்த  குடிமக்களிடமிருந்து இந்த அளவுக்கு வசூலித்தி ருப்பதை பெருமையாக இவர் கூறிக் கொள்கிறார்.

இந்த லட்சணத்தில் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு சுங்கக் கட்டணம் தொடர்பாக புதிய கொள்கை அறிவிக்கப்படும் என்றும் அதில் நியாயமான சலுகைகள் வழங் கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி யென்றால் இப்போதிருப்பது அநியாய கட்டணம் என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார்.

இவர் கூறுகிற புதிய கொள்கையின்படி சுங்கச் சாவடிகளே இருக்காது. மாறாக, அனைத்து வாக னங்களிலும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப் படும். வாகனங்கள் பயணிக்கும் தூரத்தை வைத்து  கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள் ளது. இப்போதிருக்கும் சுங்கச்சாவடியை விட  இது கூடுதல் கட்டணமாக இருக்க வாய்ப்புண்டு என்று கூறப்படும் நிலையில் இந்த புதிய திட்டம் வந்த பிறகு சுங்கக் கட்டணம் குறித்த புகாரே இருக் காது என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.

சுங்கக் கட்டணத்தை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறி யுள்ளார். ஒன்றிய அரசு ஆறு வழி மற்றும் நான்கு வழி சாலைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூ லிக்கிறது. இருவழிச்சாலைகளுக்கு வசூலிப்பது இல்லை என்று அவர் தாராளப் பிரபு போல கூறி யுள்ளார். நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை களுக்கு ஒன்றிய அரசு கட்டணம் வசூலிக்கும் நிலையில், மற்ற சாலைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் கட்டண வசூல் உள்ளது. போகிற போக்கைப் பார்த்தால் நாட்டில் கட்டணம் இல் லாத சாலைகளே இருக்காது போலிருக்கிறது. 

60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச் சாவடி மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி என்று கூறும் ஒன்றிய அமைச்சர் அதற்கு விதி விலக்குக ளும் உண்டு என்கிறார். அநேகமாக விதி விலக்கு களே இங்கு விதியாக இருக்கிறது என்பதுதான் உண்மை. ஒரு சாலை அமைப்பதற்கு தனியார் நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்தன, இது வரை எவ்வளவு தொகையை வசூலித்துள்ளன என்பது குறித்த விபரங்கள் மர்மமாக இருக் கின்றன. 

காலாவதியான சாலைகளுக்கும், முழுமை பெறாத சாலைகளுக்கும் கூட சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உண்மையில் சுங்கக் கட்ட ணத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இட மில்லை என்று வழிப்பறிக்கு வக்காலத்து வாங்கி யுள்ளார் அமைச்சர். சுங்கச் சாவடிகள் மக்களை தவணை முறையில்  சாகடிக்கும் இடங்களாக மாறி வருகின்றன.