headlines

img

பணவீக்கம் தீங்கற்றதா?

 “பணவீக்கம்” என்ற பிரச்சனையைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. விலை உயர்வு நிரந்தரமாகிப் போன நிலையில் இதுபற்றிப்  பேசுவது, மெல்ல மெல்ல மறக்கச் செய்யப்பட்டு வருகிறது.  பணவீக்கமானது எல்லையை மீறுவது பொருளாதார வளர்ச்சிக்கு கேடு என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் ரிசர்வ் வங்கி அனுமதித்திருக்கும் பணவீக்க அளவுடன் தானே இன்றைய நிலை உள்ளது என்ற  சமாதானங்கள், பொருளாதார ஏடுகளையே கூட இதுபற்றி எழுதவிடாமல் செய்துள்ளன.  நுகர்வோர் விலை குறியீட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் இப்போது உயர்ந்திருப்பதும், ஐந்து மாதங்களில் அதிகபட்ச அளவான 2.92%ஐ 2019 ஏப்ரலில் எட்டியதும், ரிசர்வ் வங்கியின் மொழியில் சொன்னால் தீங்கற்ற ஒன்றே. ரிசர்வ் வங்கி தனது ‘கொள்கை’ விகிதத்தை மூன்று மாதங்களுக்குள் 6%லிருந்து 5.75%ஆக குறைக்க முடியும். ஆனால் அதே வேகத்தில் மக்களின் பொருளாதாரச் செயல்பாடு இல்லை. அறிவிக்கப்படாமலே எல்லாப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இத்தகைய பின்னணியில் “தீங்கற்ற” பணவீக்கம் என்ற கருத்தாக்கம் திட்டமிட்டு பாஜக அரசின் அதிகாரிகளால் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வும் சரிவும் உலக சந்தையில் பெட்ரோல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் மற்றும் உள்ளூர் விவசாய உற்பத்தியில் ஏற்படும் மாற்றங் களால் ஏற்படுபவை என்றே வகைப்படுத்தப்  பட்டுள்ளது. இவற்றின் மீது ரிசர்வ் வங்கிக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஏனென்றால் விலைக் கட்டுப்பாடு என்பது அரசின் கொள்கையாக இல்லை. எனவே, பாஜக ஆட்சியில் நுகர்வோர் விலைகளின் ‘கருணை’ என்பது அதிர்ஷ்டத்தின் பாற்பட்டதாக மாறிவிட்டது. ரிசர்வ் வங்கி அனுமதித்திருக்கும் எல்லைக்குள்ளேயே பணவீக்க புள்ளி விபரம் இருந்தாலும் பொதுவாக அது முதலில் தோன்றுவதைப் போல் நுகர்வோருக்கு நல்லதல்ல.  கடந்த 33 மாதங்களில் அதிகபட்சமான 7.4%ஐ தொட்டது. முக்கியமான உணவுப்பொருட் களின் விலையுயர்வே இதற்குக் காரணம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது பருப்புகளின் விலை 14%ம், தானியங்களின் விலை 8.5%ம் அதிகரித்தது. இப்போதும், தென்மேற்கு பருவ மழைப் பொழிவு அவ்வளவு சிறப்பாக இருக்கா தென வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் நிலையில் விவசாய உற்பத்தி குறையும் என்பதால் விலையுயர்வு இன்னும் அதிகரிக்கும். மேலும், உலகப் புவி அரசியலில் நிலவும் நிச்சயமற்ற நிலையின் காரணமாக பெட்ரோல் விலை ஒரு பேரலுக்கு இப்போதிருக்கும் 60 என்ற குறைந்த விலையிலிருந்து அதிகரிக்கக்கூடும். இதன் விளைவாகவும் விலை உயரும். இதனால் லாபம் உண்டு.. இந்திய மக்களுக்கல்ல.. அவர்களது உழைப்பையும், கூலியையும் உறிஞ்சிக் கொழுக்கும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு.