நாட்டில் முப்படைகளையும் அதன் பிற துறை களையும் வழிநடத்தும் ஒரே தலைமைத் தளபதி பதவியை உருவாக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி இப்படி ஒரு பதவி உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த யோசனைக்கு செயல்வடிவம் அளிக்கும் வகை யில் புதிய பதவியைத் தோற்றுவிக்கச் சமீபத்தில் மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள் ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1999ல் கார்கில் போர் நடைபெற்றது. அந்த போருக்குப் பிறகு, பாதுகாப்புத்துறையில் செய்யப்பட வேண் டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய, கே.சுப்ர மணியன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப் பட்டது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படை யில், ‘முப்படைகளுக்கும் ஒரே தளபதி’ அதாவது சிடிஎஸ் (சீப் ஆப் டிபென்ஸ் ஸ்டாப்) உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சுப்ரமணி யன் குழுவின் பரிந்துரைகளை ஆராய,எல்.கே. அத்வானி தலைமையில் அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டது.
சிடிஎஸ் உருவாக்குவது தொடர்பான விஷ யத்தை, அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை உரு வாக்கிய பின், பார்த்துக்கொள்ளலாம் என அமைச்சர்கள் குழு அரசுக்குத் தெரிவித்தது. அதன் பின்னர் பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நரேஷ் சந்திரா குழுவும் ஷேகட்கர் குழுவும் ’முப்படைக ளுக்கும் ஒரே தளபதி’ உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு இதுதொடர்பான விவாதங்களை மீண்டும் துவக்கியுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றபோதிலும், நிர்வாகத்தில் ராணுவத்தின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா செய்ய முனைந்த சீர்திருத்தங்களைப் பாகிஸ்தான் செய்யத்தவறியது. அதனால்தான் அங்கு அரசியலில் ராணுவம் தலையிட நேர்ந்தது. இதனால் அந்நாட்டில் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து சர்வாதிகார ராணுவ ஆட்சி நடைபெற்றது. இந்தியா செய்த சீர்திருத்தங்களுள் முதன்மையானது ராணுவத்துக்கு அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் வீரர்களைத் தேர்வுசெய்து, ராணுவத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தின் ஆதிக் கத்தைக் கட்டுப்படுத்தியது.இதனால் இந்தியா வில் ராணுவத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்பில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது.
முப்படைகளுக்கும் ஒருங்கிணைந்த தலைமை அல்லாமல், மூன்று படைகளுக்கும் தனித்தனி தலைமையை உருவாக்கி, அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிற நடைமுறை உருவாக்கப்பட்டது. பாதுகாப்புப் படைகளுக்கு இடையே அதிகாரம் பிரித்தளிக்கப்பட்டது. முப் படைகளுக்குமான தலைமை தளபதியாக குடியர சுத் தலைவர் இருக்கும் நிலையில், அவர் மூலமா கவே முப்படைகளையும் ஒருங்கிணைக்க முடியும். தற்போது உள்ள இந்த ஏற்பாடே பாதுகாப்பான ஏற்பாடுதான். எனவே முப்படைகளுக்குமான ஒரே தளபதி என்கிற பதவி உருவாக்குவது தேவை யற்றது. ஜனநாயக முறையில் அரசு முறை உள்ள நமது நாட்டிற்கு ஆபத்தானதும் கூட.