headlines

img

இது நாடா - இல்லை வேலியில்லாத காடா?

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர் ச்சியளிக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டுமென்றும் பொது மக்களின் கருத்தை கேட்க வேண்டுமென்றும் 2006ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் அரசாணை யில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வெளியி டப்பட்ட அறிவிப்பில் கடல் பகுதி, நிலப்பகுதிக ளில் கேஸ், எண்ணெய் உற்பத்தி மற்றும் விரிவாக்கத் திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவை யில்லை. பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டிருப்பது கார்ப்பரேட் முதலாளிகள் இயற்கை வளங்களை எவ்வித தடையுமில்லாமல் சூறையாடவே வழி செய்யும்.  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மோடி அரசு துடிக்கிறது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதியில் அடுத்தடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்படு கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உருவாக்கி சுற்றுச்சூழலை நாசம் செய்த வேதாந்தா நிறுவனம் உள்பட பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்தடுத்து அனுமதி பெறுகின்றன.

விவசாயிகள்,மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இது வரை அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் துவக்கப்படாத நிலையில் தற்போது சுற்றுச்சூழல் அனுமதியும் தேவையில்லை. மக்கள் கருத்தை கேட்க வேண்டியதுமில்லை என உத்தரவு பிறப்பிப்பது யாருடைய நலனுக்காக? தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவக்கப் படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் லட்சக்க ணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள், கிராமப்புற மக்கள், மீனவர்கள் தங்கள் வாழ்வா தாரத்தை முற்றிலுமாக இழக்க நேரிடும்.  இதுவரை நான்கு முறை ஏலம் விடப்பட்ட நிலையில், தற்போது ஐந்தாவது ஏலத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காவிரி பாச னப்பகுதியில் மட்டும் 4064.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை பன்னாட்டு முதலாளிகள் அபகரிக்க வுள்ளனர்.

விவசாய நிலங்கள் மட்டுமின்றி கடற்பரப்பும் முற்றிலுமாக பன்னாட்டு முதலாளிகளின் கையில் செல்லவுள்ளது. நிலத்தையும், வாழ்வையும் இழக்கும் நிலையில் உள்ள மக்களின் கருத்தைக் கூட கேட்க வேண்டியதில்லை, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்து குறித்தும் அக்கறை கொள்ள தேவையில்லை என்று மோடி அரசு அரசாணை வெளியிட்டிருப்பது இந்தியாவின் அரசியல் சாச னத்திற்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது. மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு உட்பட தமிழகத்தின் எந்த கோரிக்கையை யும் மோடி அரசு ஏற்காத நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப் படுத்த விட மாட்டோம் என் மாநில அரசு உறுதிபட தெரிவிக்க வேண்டும். தமிழகத்தை அழிக்க வரும் திட்டத்திற்கு துணை போவதை மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.