அதே மழை
மழைத் துளிகள்
சப்தமற்று விழுந்தபோது
நாம்
மவுனத்திற்குள்
நடந்து கொண்டிருந்தோம்
தரையில் வெடிக்கும்
மழைத்துளியின்
சப்தம் பிரிவென்கிறது
சட்டென பளீரிடும்
மின்னலுக்குள்
தேடத் துவக்குகிறேன்
அதே மழை
அதே இடம்
அதே பயணம்
வராமலா போகும்
வாய்ப்பாடு
சிலேட்டில்
எழுதப்பட்ட வீட்டுப் பாடங்களில்
பெரும்பாலும்
நிறைந்திருந்தது
வாய்ப்பாடு..
கரை சேரும்
இரவு
காத்திருக்கிறது
நீந்தி நீந்தி
நிலவு
கரை சேரும் வரை