உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது. தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோய் இம்மாதம் 17அன்று ஓய்வு பெறவுள்ளதால் வரும் 13க்கு முன்பு முக்கியமான பல வழக்குகளில் தீர்ப்பளிக்க உள்ளார். அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் குறித்த அயோத்தி வழக்கும் ஒன்று.
ஏற்கனவே சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை சன்னி வக்பு வாரியம் நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
சமரசப் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்ச னைக்கு தீர்வுகாண உச்சநீதிமன்றம் அமைத்த சம சரக்குழுவும் 4 மாதங்களாக அனைத்து தரப்பி னரையும் அழைத்துப்பேசியபோதும் அது பலனளிக்கவில்லை. எனவே வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.இன்னும் ஒருவாரத்திற்குள் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் நாடு முழுவதும் திட்டமிட்டு ஒரு பதற்ற நிலையை இந்துத்துவா சக்திகள் உரு வாக்கி வருகின்றன. தீர்ப்பு தங்களுக்கு சாதக மாக வரும் என்றும் பாபர்மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று ராமர் கோவில் கட்டும்பணி தொடங்கும் என்றும் உன்னாவ் தொகுதி பாஜக எம்.பியும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஷம் கக்கும் மதவெறிப் பேர்வழியுமான வகையில் எப்போதும் பேசும் சாக்சி மஹராஜ் தெரிவித்திருக்கிறார்.
இவர் மட்டுமல்ல, மத்திய அமைச்சர்களும் பல பாஜக தலைவர்களும் ஆர்எஸ்எஸ் தலைவர்க ளும் தங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்பதைப்போல் பேசி வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களே நீதிமன்ற தீர்ப்பின் வெற்றியை எப்படி ‘கொண்டாட’ வேண்டும் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், தில்லி, ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாது காப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தீர்ப்பை பயன்படுத்தி மதவாத சக்திகள் வன்முறை யில் ஈடுபடுவதைத் தடுக்க தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொள்வது அவசியம்.
தென்மாநிலங்களில் காலூன்ற தீவிரமாக முயன்று வரும் பாஜக பரிவாரம் இந்த தீர்ப்பை பயன்படுத்தி வெறியாட்டம் போட எத்தனிக்கிறது. இந்த மாநிலங்களில் உள்ள அரசுகளும் பாது காப்பை பலப்படுத்தி அமைதியை பராமரிக்க முன்னுரிமை அளிக்கவேண்டும். பதற்றம் நிறைந்த நகரங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும். சிறு பான்மை மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வழிப் பாட்டுத்தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.