headlines

img

டிரம்ப் தேசத்தில் கொரோனா

ஒரு தொற்றுநோய் பேரிடரின் போது டிரம்ப் கோமாளித் தனமாக நடந்து கொள்வது தனிப்பட்ட மனிதர் ஒருவரின் வீழ்ச்சி மட்டுமல்ல; ஒரு நாடு நெருக்கடி காலத்தில்  தீர்மானகரமாக செயலாற்றுவதற்கான திறனை இழந்துவிட்டதற் கான அறிகுறியாகும்.

மார்ச். 4 இல் கொரோனா குறித்து பயப்பட வேண்டியதில்லை; அது ஆண்டுக்கு 77000 பேர் வரைக் கொல்லும் ஃப்ளூ காய்ச்சலைவிட கொடியது இல்லை என்றார். ஆனால் அவரது அலட்சியத்தால் அமெரிக்கா தற்போது பயங்கரமான விளைவுகளைச் சந்தித்துள்ளது.

ப்ளூ பாதித்தோர் மரணவிகிதம் 0.1%. கொரோனா பாதிக்கப்பட்டோரில் மரணவிகிதம் 3.4% என்பது உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடு. இது அமெரிக்க மக்களின் உடல்நலம், உலகின் அச்சுறுத்தல் பற்றி டிரம்ப் எவ்வளவு அக்கறை யற்று இருந்தார் என்பதற்கு உதாரணம்.

அவர் மட்டுமல்ல. அவரின் கீழான நிர்வாகம் தொற்றுநோயை எதிர் கொள்வதற்கான நிதி ஒதுக்கீட்டை 15%, (1.2 பில்லியன் டாலர்) குறைத்து  விட்டது. இதனால் தொற்று நோய் பேரிடர் காலத்தில் பணியாற்றும் பயிற்சி பெற்ற ஊழியர் கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்.

2019இல் 30 பெரிய மருத்துவமனைகள் திவால் நோட்டீஸ் அளித்தன. மக்களின் மருத்துவ பராமரிப்பிற்கான நிதி வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. குறைந்து வரும் அரசு உதவிகளின் காரணமாக மெகா மருத்துவமனைகள் நகர்ப்புற,  ஊரக ஏழைகள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை  மூடிவிட்டு, பணக்காரர் வசிக்கும் பகுதிகளில் பிரமாண்டமான மருத்துவ மனைகளை உருவாக்கியுள்ளன.  கொரோனா நெருக்கடியின் போது இந்த மெகா மருத்துவ மனைகளில் போதுமான படுக்கைகள், மருத்துவர்கள் இல்லாத நிலையில் உள்ளன.

டிரம்பின் கொள்கைகளால் கரோனா வைரஸ்  பேரிடரை எதிர்கொள்ளும் நிலையில் அமெரிக்க மருத்துவ கட்டமைப்புகள் இல்லை. அங்கு 45000 ஐசியூ படுக்கைகள் மட்டுமே உள்ளன. தென் கொரியாவில் 1000 பேருக்கு 12.3. மருத்துவமனை படுக்கைகளும், சீனாவில் 1000 பேருக்கு  4.8 படுக்கைகள் உள்ளன. அமெரிக்காவில் 1000 பேருக்கு 2.8 மருத்துவ மனை படுக்கைகள் மட்டுமே உள்ளன.  சீனா பத்தே நாட்களில் இரண்டு சிறப்பு மருத்துவமனைகளைக் கட்டி முடித்தது. இது போன்ற தேவை ஏற்பட்டால் அதற்கு அமெரிக்க தனது ராணுவத்தையே நம்பி இருக்கிறது. அவ்வாறு உருவாக்கினாலும் ஆயிரக்கணக்கான பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் இல்லை.

ஃபெடரல் ரிசர்வ் வங்கி 2019இல் எடுத்த சர்வேயின்படி, 40% அமெரிக்க மக்களின் வங்கிக் கணக்கில் 400 டாலர் கூட இருப்பு இல்லை. எனவே, சமூக விலகல் காலத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். டிரம்ப் தொடர்ச்சியாகதொலைக்காட்சிகளில் தோன்றினார். ஆனால் நாட்டு மக்களிடம் அவர் உண்மையைப் பேசவில்லை. தொழி லாளர்கள் நகங்களைக் கடித்தவாறு பதட்டத்தில் உள்ளனர். மூத்த குடிமக்களோ மரண தேவதை யை நினைத்து அஞ்சியவாறு இருக்கின்றனர். அமெரிக்க முதலாளித்துவம் கண்களுக்கும் சேர்த்து கவசத்தைக் கட்டிக் கொண்டுள்ளது.