headlines

img

கேடு கெட்ட முறையில் அதிகார துஷ்பிரயோகம்

தில்லிக் காவல்துறையின் குற்றப்பிரிவு, ஒரு சதிக் கருத்தியலை ஜோடனை செய்திருக்கிறது. அதன் மூலமாக பிப்ரவரி இறுதிவாக்கில் வடகிழக்கு தில்லி யில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட் டங்களுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களை இணைத்திருக்கிறது. போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்களைக் கைது செய்திருக்கும் விதம், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் குற்ற அறிக்கைகள் தாக்கல் செய்திருப்பது ஆகிய அனைத் தும் இவர்களின் உண்மையான சதித்திட்டத்தை வெளிப் படுத்தியிருக்கிறது. இந்த சதித்திட்டம் அமித்ஷாவின் உள்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் அரங்கேறியிருக்கிறது.

வகுப்புக் கலவரங்களைத் தூண்டியதாகவும், திட்ட மிட்டதாகவும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக இந்நாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களில் எண்ணற்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில், சிலர் மிகவும் அரக்கத்தனமான சட்டமாகவும், பிணையில் செல்ல முடியாதமுறையிலும் விளங்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்பது குற்ற அறிக்கைகளின் காலவரிசை, பின்வருமாறு: ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடைபெற்ற குடி யுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டங் கள் வன்முறையாக மாறியது, இதனைத் தொடர்ந்து ஷாஹீன்பாக், போன்று நகரின் பல இடங்களிலும் நடை பெற்ற கிளர்ச்சிப் போராட்டங்கள் சாலைகளை முற்றுகை யிடுவதற்கு இட்டுச்சென்றன, ஜாபராபாத்தில் நெடுஞ் சாலையை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட சாலையில் அமர்ந்து நடத்திய போராட்டம் மதக் கலவரத்தைத் தூண்டிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப் பட்டது. காவல்துறையினர் இவ்வாறு கதை புனைந்த பின்னர், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்க ளில் சிலரையும் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் சிலரையும் மற்றவர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.

குற்றப்பிரிவு காவல்துறையினரால், ஜூன் 8 அன்று, தாக்கல் செய்யப்பட்டிருக்கிற நான்கு குற்ற அறிக்கைகள், “குற்றம்சாட்டப்பட்டவர்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தி ற்கு ஜனநாயகரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று வேட மணிந்து, நாட்டின் சித்திரத்திற்கு தீங்குவிளைவிக்க வேண்டும் என்ற முறையில், மதச்சண்டையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சதி செய்தார்கள்,” என்று குற்றம்சாட்டியிருக்கிறது.

ரத்தன்லால் என்கிற தலைமைக் காவலர் கொல்லப் பட்டது சம்பந்தமான வழக்கின் குற்ற அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய “சதிகாரர்களின் கும்பலைச்” சேர்ந்தவர்கள் என்கிறது.

அரசுத்தரப்பு வழக்குகளின் நோக்கம் மிகவும் தெளிவா கும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது என்பது மதவன்முறைகளைத் தூண்டுவதற்காகவும், திட்ட மிடுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட வேடம் என்று அரசு சொல்கிறது.  இதேபோன்றே, உளவு ஸ்தாபனத்தைச் சேர்ந்த அங்கித் சர்மா கொல்லப்பட்டது தொடர்பான குற்ற அறிக்கை, புகழ்பெற்ற குடிமை உரிமைகள் செயற் பாட்டாளரான ஹர்ஷ் மந்தர், ஜாமியா வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற கூட்டத்தில் அமைதிக்காகப் பேசு வதாகக் கூறிக்கொண்டு “வெறுப்புப் பேச்சை” நிகழ்த்தி யதை அடுத்து நடைபெற்ற தொடர் நிகழ்வுகளால், அங்கித் சர்மா கொல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெறுப்புப் பேச்சுக்களைப் பொறுத்தவரையில், தில்லிக் காவல்துறையினர் அவ்வாறு பேச்சைக் கக்கிய பாஜக தலை வரான கபில் மிஸ்ரா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூட இதுவரை உறுதியான முறையில் மறுத்து  வருகிறது.  கபில் மிஸ்ரா, பிப்ரவரி 23 அன்று ஜாபாராபாத் தில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கலைந்துசெல்ல வில்லை என்றால் அவர்களை வலுக்கட்டாயமாகக் கலைப் பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அச்சுறுத்தி இருந்தார். அந்த சமயத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் நகரை விட்டு வெளியேறியிருந்தார். இவ்வாறு இவர் பேசும்போது காவல்துறைத் தலைவரும் உடன் இருந்தார்.  

காவல்துறையினர் தாக்கல் செய்திருக்கும் கொலை வழக்குகளில் இரண்டில் இந்துக்கள் குற்றம்சாட்டப்பட்டவர்க ளாக இருக்கிறார்கள். இவற்றில், “பிப்ரவரி 24 அன்று பெரிய அளவில் கொலைகள் மற்றும் சொத்துக்களை நாசம் செய்யும் வேலைகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டதாகவும், இதற்குப் பழிவாங்கும் விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்,” என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

தில்லி, கீழமை நீதிமன்றம் ஒன்றிற்கு, ஜாமியா மாணவர் ஒருவரை நீதித்துறை காவலுக்காக, காவல்துறையினர் கொண்டுவந்திருந்தபோது, வழக்கை விசாரணை செய்த நீதிபதி,  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் விதம் சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமையாது, ஒருபக்கம் மட்டுமே சாய்ந்திருப்பதைக் கண்டு, “வழக்கின் நாட் குறிப்பைப் பார்க்கும்போது அது ஒரு சங்கடமான உண்மை யைப் புலப்படுத்துகிறது. புலன் விசாரணை ஒருதரப்பின ரை மட்டும் குறிவைத்திருப்பது போன்றே தோன்றுகிறது,” என்று கூறியிருந்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிரா கத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சிலவற்றில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, பிணை கோரி நீதிமன்றத்தின் முன் விசாரணை நடைபெற்ற சமயத்தில், கீழமை நீதிமன்ற நீதி பதிகளில் சிலர், குற்றம்சாட்டப்பட்டவர்களால் சீரியசான குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் எதுவும் காட்டப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஜேஎன்யு ஆராய்ச்சி மாண வர்களான நடாஷா நர்வால் மற்றும் தேவங்கனா கலிதா ஆகியோரின் வழக்குகளிலும் இதுதான் உண்மை. இவர்களுக்குப் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே, குற்றப்பிரிவு காவல்துறையினர் இவர்களுக்கு எதிராகப் புதிதாக குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்தார் கள். பின்னர் இவர்கள் மிகக் கொடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் பிணையில் வர முடியாத அளவிற்கு வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இதேபோன்றே சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், ஜேஎன்யு மாணவர் சர்ஜீல் இஸ்லாம், ஜேஎன்யு முன்னாள் மாணவரான உமர் காலித், ஜாமியா மிலியா ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சஃபூரா சாகர், மீரான் ஹைதர், சிஃபா-உர்-ரஹ்மான், ஜேஎன்யு மாணவரான நடாஷா நர்வால் மற்றும் சிலர் மீதும் பாய்ந்திருக்கிறது. இவர்களில் எவரொருவருக்கும்  நடந்த மத வன்முறை வெறியாட்டங்களுக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.

உள்துறை அமைச்சகத்தின் வரையறையின்படி, குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது ஒரு சட்டவிரோத நடவடிக்கையாகும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டுள்ள சங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்குப் பொருந்தும். நாட்டின் இறையாண்மையை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதிக்கக்கூடிய பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளை எதிர்த்திடத்தான் இது கொண்டுவரப்பட்ட தாகக் கூறப்பட்டது. இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தி ற்கு எதிராக கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்துவதும் கூட பயங்கரவாத மற்றும் அழிவை ஏற்படுத்தக்கூடிய குற்றமாகும் என்று அரசு கருதுவதுபோல் தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது என்பது முற்றிலும் அதிகாரத் துஷ்பிரயோகமாகும். குடிமக்களின் உரிமைகளை முழு மையாக மீறும் செயலாகும். குறிப்பாக, சட்டவிரோத நடவ டிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் சஃபூரா சாகர் கைது செய்து  அடைத்து வைத்திருப்பது, கண்டிக்கத்தக்கது. அவர் ஒரு கர்ப்பிணி. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் சமயத்தில் அவர் சிறைவைக்கப் பட்டிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக மிகவும் கேடுகெட்டமுறை யில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் அவர் மீது பாய்ந்திருக்கிறது. இவர் கைது செய்யப்பட்டிருப்பதை, நீதித் துறைக் கேட்கமுடியாமல் செய்யப்பட வேண்டும் என்பதற்கா கவே இவ்வாறு இச்சட்டம் அவர்மீது பாய்ந்திருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடி மக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்க ளை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்து அடைத்து வைத்திருப்பது, அவர்கள் அனை வரையும் அரசியல் கைதிகளாக மாற்றியிருக்கிறது. இதே உத்தியைத்தான் இவர்கள் பீமா கொரேகான் வழக்கிலும் பின்பற்றி, சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லகா மற்றும் பலரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ், அவர்களுக்கு எதிராக சாட்சியங்களை ஜோடனை செய்து அல்லது தங்கள் ஆட்சியதிகாரத்தை எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு சாட்சி யம் எதுவும் இல்லாமலேயே கூட, கைது செய்து சிறையில்  அடைத்திருக்கிறார்கள்.

தில்லியில் அரசியல் செயற்பாட்டாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, தில்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடந்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் பிரச்சா ரத்தின்போது பாஜக தலைவர்கள் முஸ்லிம் எதிர்ப்புப்  பிரச்சாரத்தில் மிக மோசமான முறையில் ஈடுபட்டிருந்தார் கள். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியாளர்கள் சிறுபான்மை யினருக்கு எதிராகவும், தங்கள் மதவெறி சூழ்ச்சித் திட்டத் தினை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் காவல்துறையின் புலன்விசாரணைகளை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த நோக்கத் திற்காக கோவிட் தொற்றையும், சமூக முடக்கத்தையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தில்லிக் காவல்துறையினரின் இத்தகு தவறான செயல் களையும், அவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதி ராகப் போராடியவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருப்ப தையும், ஏதோ கிறுக்குத்தனமாக செய்கிறார்கள் என்று மட்டும் பார்க்கமுடியாது. இது, குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான சீரியசான தாக்குதலாகும். இது, விஷத்தனமான எதேச்சதிகாரத்தின் வெளிப்பாடாகும். இந்தியாவின் உள்துறை அமைச்சரின் கட்டளைப்படி தலைநகரில் இது நடந்திருக்கிறது.

அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த நிகழ்ச்சிப் போக்குகளை உதாசீனம் செய்திடாமல் கண்டிக்க முன்வர வேண்டும். சட்டங்களை அநீதியாகப் பயன்படுத்துவதற்கு எதிரான போராட்டமும், அரசமைப்புச்சட்டத்தின் கீழ் அடிப் படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் வர விருக்கும் காலங்களில் எவ்விதத்திலும் தளர்த்தப்பட மாட்டாது என்பதை மோடி அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்.

(ஜூன் 10, 2020), தமிழில்: ச.வீரமணி