headlines

img

புதிய இந்தியாவுக்கு எது அவரசத் தேவை....

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் நாடு முழுவதும் பெரும் துயரம் நீடிக்கிறது.நாள்தோறும் லட்சக்கணக்கானோர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். நேற்று முன்தினம் மட்டும் சிகிச்சை பலனின்றி 48ஆயிரத்து 768 பேர்உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், பாஜக கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் உள்ள பீகாரில் ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழப்பது தொடர்கிறது.

மத்திய அரசு பல மாநிலங்களுக்கு அனுப்பிய உயிர்காக்கும் சாதனங்கள் செயல்படவில்லை. பலசாதனங்களை இயக்க தேவையான ஊழியர்கள்இல்லை. இம்மாநிலங்களின் மருத்துவமனைகளில் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட மருத்து
வர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 23 விழுக்காடு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. பெருந்தொற்றால் நாட்டு மக்கள் பீடிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தப்பணியிடங் களை நிரப்ப பாஜக அரசுகள் தயாராக இல்லை என்பதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.  மத்திய அரசு பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பிய 320 உயிர்காக்கும் சாதனங்களில் 83 மட்டுமே செயல்படுகிறது. பீகார் மாநிலத்தில் 13 மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 109 உயிர்காக்கும் சாதனங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

குஜராத் மாநிலத்திலிருந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன. கடந்த மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 10 ஆம் தேதி வரை  குஜராத் மாநிலத்தில் 1 லட்சத்து 23 ஆயிரம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள் ளன. இதே காலகட்டத்தில் குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் வெறும் 4215 என்று அம்மாநிலஅரசு கூறுகிறது. ஒரு மாநில அரசே புள்ளிவிவ ரங்களில் மோசடியில் ஈடுபடுவதால் உலகளவில்இந்தியாவின் நம்பகத்தன்மை சீர்குலைந்துள்ளது. எனவேதான் சர்வதேச புகழ்பெற்ற நாளிதழ்கள்மோடி அரசை விமர்சித்து  செய்தி வெளியிடு கின்றன. நாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட நான்கு மடங்கு மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று ஊடகங்கள்தெரிவித்துள்ளன.

மறுபக்கம் மக்களைப் பாதுகாக்கத் தடுப்பூசி செலுத்துவதிலும் இந்தியா பின்தங்கியுள்ளது. இவ்வளவு பிரச்சனைகள் உள்ள போதிலும் பிரதமர்மோடியும் பாஜக தலைவர்களும் எதைப்பற்றியும் கவலையில்லாமல் பிரச்சனையை திசைதிருப்பும் நோக்கத்தில் செயல்படுகின்றனர்.உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அயோத்தியில் 2022 ஆம் ஆண்டுக்குள் ராமர் கோவிலின் முதல் தளத்தைக்கட்டிமுடித்துவிடவேண்டும் என்பதில் குறியாகஉள்ளனர். அடுத்த பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்குள்  இந்த கோவிலை முழுவதுமாக கட்டிமுடிக்கத் திட்டமிட்டுள்ளனர். புதிய இந்தியாவுக்கு  வானளாவிய சிலைகளோ  புதிய ஆடம்பரமான வழிபாட்டுத் தலங்களோ தேவையில்லை. தேவை மருத்துவமனையும் உயிர்காக்கும் மருத்துவ சாதனங்கள் அடங்கிய தீவிர சிகிச்சைப் பிரிவும்தான் என்பதைக் காலம்உணர்த்தியுள்ளது. இதை மத்திய ஆட்சியாளர்கள் நிறைவேற்றாதவரை பெருந்துயரத்திலிருந்து நாடு விடுபடுவது கடினம்.