மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த பஞ்சா யத்துத் தேர்தலில், முந்தைய அனைத்துத் தேர்தல்களிலும் செய்ததைப் போலவே மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மிக மோசமான வன்முறை வெறியாட்டத்தை கட்ட விழ்த்துவிட்டது. ஆனால் இந்த முறை, அது மக்களின் கடும் எதிர்ப்பையும் ஆவேசத்தையும் பதிலடியையும் எதிர்கொள்ள நேரிட்டது.
ஜூலை 8 அன்று நடைபெற்ற இந்த தேர்த லில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை போட்டியிட விடாமல் செய்வதற்கு திரிணாமுல் முயற்சி மேற்கொண்டது. எதிர்க்கட்சி வேட்பா ளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்ற போதே பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. மிக குறுகிய கால அவகாசம் மட்டுமே எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் கடந்த தேர்தலைப் போலவே இந்த முறை யும் மிகப் பெருவாரியான இடங்களை போட்டி யின்றி கைப்பற்றி விடலாம் என்று திட்டமிட்டது. ஆனால் இந்த முறை திரிணாமுல் கனவு கைகூட வில்லை. கிட்டத்தட்ட 90 சதவீதம் இடங்களில் திரிணாமுல் குண்டர்களின் வன்முறையை மீறி இடது முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பா ளர்கள் போட்டியிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த திரிணாமுல் மாநிலம் முழுவதும் தேர்தலின் போது மிகப் பெரு வாரியான வாக்குச்சாவடிகளை, குண்டர்களை ஏவி ஆயுத முனையில் கைப்பற்றி வாக்காளர் களை வெளியேற்றி கள்ள ஓட்டு பதிவு செய்ய முயற்சித்தது. ஆனால் வாக்காளர்கள் இந்த முறை பின்வாங்கவில்லை. ஏராளமான கிரா மங்களில் ஆயுதமேந்திய திரிணாமுல் குண்டர் களை எதிர்த்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தாங்களும் கையில் கிடைத்த கம்பு, கட்டைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு எதிர்த்து மோதினர். கடந்த பத்தாண்டுகளில் முதல்முறையாக பெருவாரியான கிராம மக்கள் இப்படி களத்தில் இறங்கி திரிணாமுல் குண் டர்களுக்கு பதிலடி கொடுத்திருப்பது இதுவே முதல்முறை. மக்களின் இந்த எழுச்சி, தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடது முன்னணி நடத்தி வந்த வலுவான போராட் டங்கள் மற்றும் அரசியல் பிரச்சாரத்தின் விளைவே என்பது குறிப்பிட்டத்தக்கது.
இந்தப் போராட்டத்தில் கடந்த பத்தாண்டு களுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் எதிர்கொண்ட இழப்புகளும், தாக்குதல்களும் எத்தனை எத்தனை! நூற்றுக்கணக்கான மக்கள் ஊழியர் கள், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் திரிணா முல் குண்டர்களாலும், அவர்களோடு கைகோர்த்துக் கொண்ட அதிதீவிர வலதுசாரி மற்றும் அதி தீவிர இடதுசாரி சக்திகளாலும் மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால் இது நிரந்தரமல்ல. எத்தனை இழப்புகளை எதிர்கொண்டாலும் இடதுசாரிகள் மீண்டெழுவார்கள்; அவர்களது தலைமையில் மக்கள் எழுச்சி பெற்று பதிலடி கொடுப்பார்கள் என்பதை வங்கம் நிரூபித் துள்ளது.