12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹரித் வார், உஜ்ஜைன், நாசிக், பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளில் நடைபெறும் மகா கும்பமேளா, பல தசாப்தங்களாக பல துயரங்களை சந்தித்து வரு கிறது. இந்தாண்டு உத்தரப்பிரதேசம் பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நெரிசலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது அந்த மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிர்வா கச் சீர்கேடு மற்றும் அக்கறையின்மையினால் ஏற்பட்டிருக்கும் துயரமே ஆகும்.
துறவிகளின் அமாவாசை என்று குறிப்பி டப்படும் “மௌனி அமாவாசை நாளில்தான் இந்த பிரபஞ்சம் உருவானது, அன்று புனித நதிகளின் நீர் அமிர்தமாக மாறும்” என்றும் இந்த நவீன யுகத்திலும் ஒரு கூட்டம் மக்களை நம்பவைத்துக் கொண்டும் இருக்கிறது. அந்த நாளில் 10 கோடி பேர் வருவார்கள் என அந்த மாநில அரசும் அறிவித்திருந்தது. ஆனால் அவர்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்ய வெறும் 300 மருத்துவர்களை மட்டுமே நியமித்திருந்தது. இதிலிருந்து உத்தரப்பிரதே சத்தை ஆளும் பாஜக அரசு பக்தர்களின் பாது காப்பில் செலுத்தியிருக்கும் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும்.
இதே கும்பமேளாவில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்ட மாநில அமைச்ச ரவையே திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுந்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது பங்கிற்கு மூழ்கி எழுந்தார். அப்போதெல்லாம் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், சாதாரண மக்கள் வரும் போது இருக்கவில்லை. இங்கு வரும் மக்க ளின் நம்பிக்கையை மதத்தின் பெயரில் வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்துவதிலேயே ஒன்றிய மோடி அரசும், மாநில யோகி ஆதித்யநாத் அர சும் குறியாக இருக்கின்றன. ஆனால் அந்த அப்பாவி பக்தர்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் கொள்ளவில்லை.
இது ஏதோ திடீரென இப்போது மட்டும் ஏற்பட்டிருக்கும் நிகழ்வல்ல. இதே உத்தரப்பிர தேச த்தின் பிரயாக்ராஜ் நகரில் 1954 ஆம் ஆண்டு கும்பமேளா நெரிசலில் 800 பேர் உயிரிழந்தனர். 1986 இல் ஹரித்துவாரில் 50 பேரும், 2003 ஆம் ஆண்டு நாசிக்கில் 39 பேரும், 2013 இல் பிரயாக் ராஜ் நகரில் 36 பேரும் நெரிசலில் சிக்கி உயிரிழந்த னர். தற்போதும் 40க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்திருக்கின்றனர்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய மாநில மற்றும் ஒன்றிய பாஜக அர சுகள் என்ன செய்து கொண்டிருந்தன? ஒன்றிய அரசின் பேரிடர் மீட்புக் குழு என்ன ஆனது. உரிய மருத்துவ வசதிகள் எங்கே ? தங்களின் நிர்வாகத் தோல்வியை மூடிமறைக்க ஊடகத்தி னரைக் கூட மருத்துவமனை பகுதியில் அனு மதிக்க யோகி அரசு மறுக்கிறது. உயிரிழப்புகள் எவ்வளவு என்பதைக் கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கும்பமேளா என்பது அப்பாவி பக்தர்களின் உயிர்களைப் பறிக்கும் மேளாவாக மாறிவிடு மோ என்ற அச்சம்தான் எழுகிறது. இந்த உயிரி ழப்பிற்கு ஒன்றிய மோடி அரசும், மாநில யோகி ஆதித்தியநாத் அரசும் பொறுப்பேற்க வேண்டும்.