headlines

img

மாணவர்களை நல்வழிப்படுத்துக !

மாணவர்களை  நல்வழிப்படுத்துக !

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முனியாண்டியின் மகன் சின்னத்துரை. கடந்த 2023 ஆம் ஆண்டு நாங்கு நேரியில் உள்ள அரசு பள்ளியில் படித்த போது சாதியம் தொடர்பான பிரச்சனையில் சக மாண வர்கள் சிலரால் வீடு புகுந்து சரமாரியாக  வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். இந்த தாக்கு தலை தடுக்க வந்த சின்னதுரையின் தங்கைக்கும் வெட்டு விழுந்தது. சின்னதுரை மற்றும் அவரது  தங்கை இருவரும் சிகிச்சைக்கு பிறகு குண மடைந்தனர். அவர்களின் பாதுகாப்பு கருதி அரசு சார்பில் சின்னத்துரைக்கு ரெட்டியார்பட்டியில் வீடு  வழங்கப்பட்டது. 

இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வந்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாண வன் சின்னதுரை  கல்லூரியில் தற்போது 2 ஆம்  ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.  சின்னத் துரையை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு திரு நெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் அருகி லுள்ள வசந்த நகருக்கு வரவழைத்துள்ளனர். அத்து டன் சின்னத்துரைக்கு வேண்டப்பட்ட ஒரு மாணவ னும் அவரை வரச் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

வசந்த நகருக்கு சின்னத்துரை வந்ததும் அங்கு  பதுங்கியிருந்த மர்ம நபர்கள் அவரைத் தாக்கி யிருக்கின்றனர். தாக்குதலில் சின்னத்துரைக்கு ஏற்கெனவே காயம் ஏற்பட்ட கையில் மீண்டும் காயம்  ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் கிசிச்சைக் காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று  வருகிறார். ஏற்கெனவே மாணவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழகத்தையே அதிரச் செய்த நிலையில்  தற்போது அவர் மீது மீண்டும் தாக்குதல் நடந்திருப் பது கண்டனத்திற்கு உரியது. 

சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம், கட்டாரிமங்கலத்தில் கபடி போட்டியில் வெற்றிபெற்ற பட்டியலின பகுதியைச் சேர்ந்த தேவேந்திர ராஜ்  என்ற மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடை பெற்றது. அந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து  தமிழகம் மீள்வதற்குள்  மீண்டும் பட்டியலின மாண வர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றால் காவல்துறை குறித்து சாதி வெறியர்களுக்கு துளியும்  பயமில்லை என்பதையே காட்டுகிறது. 

தென் மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக் குள் சாதிய சக்திகளின் ஊடுருவல்களும், பள்ளி  மாணவர்கள் மத்தியில் சாதிய வன்கொடுமை  தாக்குதல்களும் நிகழ்வது அபாயகரமான தாகும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது சம்பவத்தின் தீவிரத்தன்மையை குறைத்து  மதிப்பிடாமல் அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்திட வேண்டும். தொடர் தலையீடுகள் மூலம் தென்மாவட்டங்களில் சாதி வெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும். சாதிய வன்கொடு மைகளை தடுத்திடும் வகையில் காவல் துறையில் தனியாக ஒரு பிரிவை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும். பள்ளி மாணவர்கள் மத்தி யில் ஊடுருவியுள்ள  சாதிய சிந்தனைகளை அகற்ற வும் அவர்களை நேர் வழிப்படுத்தவும் காவல் துறை யும் பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து பொருத்த மான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.