வெள்ளி, மார்ச் 5, 2021

headlines

img

முயல் - மு.க.இப்ராஹிம் வேம்பார்

குட்டி..குட்டி முயலும்தான்
எட்டி எட்டிப் பார்க்குது..
முன்னங்காலைத் தூக்கியே
முகத்தை அழகாய்த் துடைக்குது..!


கோலிக்குண்டுக் கண்ணாலே
குறு..குறுன்னுப் பார்க்குது..!
சின்ன..சின்னப் பல்லாலே
செடிகளைத்தான் திண்ணுது..!


பஞ்சு போல உரோமங்கள்
பிஞ்சு போல பாதங்கள்
காதைப் பிடித்து தூக்கினால்
கண்ணை..கண்ணை உருட்டுது..!


நெட்டைக் காதை நீட்டியே
எதிரிகளைப் பார்க்குது..!
குட்டை வாலை ஆட்டியே
குழிக்குள் ஓடிப் பாயுது..!


அழகான முயலுதான்
ஆமையோடு போட்டியில்..
அலட்சியத்தால் தோற்றதே..!
அவப்பெயரை ஏற்றதே..!


சோம்பேறித் தனத்தைப் போக்கணும்..!
சுறு சுறுப்பாய் வாழணும்..!
நாமும் இதை உணர்ந்தாலே
வாழ்க்கையில் ஜொலிக்கலாம்..!

;