உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை அறிவிப்பிலும் ஒன்றிய மோடி அரசு வழக்கம்போல் தனது அரசியல் சித்து விளையாட்டைக் காட்டியிருக்கிறது. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான போட்டிகள் இந்தியா வில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை 10 மைதா னங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, தர்மஷாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்க ளில் 45 லீக் ஆட்டங்களும், மூன்று பிளே-ஆஃப் போட்டிகளும் நடைபெறும்.
இதில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் உள்ள முக்கிய நகரங்களில் அதிக எதிர்பார்ப் பில்லாத போட்டிகளையும், சில முக்கிய நகரங்க ளில் போட்டியே நடைபெறாத வகையிலும் நயவஞ்சகமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் கட்டுப் பாட்டில் உள்ள பிசிசிஐ பாஜகவின் பங்காளி அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது.
2011ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தா னும் மோதிய உலகக் கோப்பைக்கான அரை யிறுதி போட்டி மொஹாலியில் நடைபெற்றது. உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த போட்டியின் போது இரு நாட்டுப் பிரத மர்களும் பங்கேற்றனர். இரு அணியிலும் பங்கேற்ற வீரர்களில் யாரும் துளியளவும் மத வேற்றுமை காட்டவில்லை. அத்தகைய பெரு மை மிகு மைதானத்தில் இந்த முறை ஒரு போட்டி கூட இடம்பெறவில்லை. அதே போல் ஜார்க் கண்ட் மாநிலம் ராஞ்சி, ராஜஸ்தான் ராஜ்கோட், கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட மைதா னங்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
அதே நேரம் தொடக்கப் போட்டி, இறுதிப் போட்டி மற்றும் இந்தியா- பாகிஸ்தானிடையே யான போட்டிகள் குஜராத் நரேந்திர மோடி மைதா னத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக் கிறது. குஜராத்தின் மதவெறி அரசியல் உலகறி யும். அதனால்தான் பாகிஸ்தான் ஆரம்பம் முதலே குஜராத்தின் அகமதாபாத்தைத் தவிர மற்ற மைதானங்களில் இந்திய- பாகிஸ்தான் போட்டியை நடத்துமாறு வலியுறுத்தி வந்தது. ஆனால் அதனை மோடி அரசு ஏற்க மறுத்து அகமதாபாத் மைதானத்தையே தீர்மானித்தி ருக்கிறது.
இது கிரிக்கெட்டிலும் மதவெறியைப் புகுத்தும் நயவஞ்சகமல்லவா? இது உலகரங்குகளில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே தலைக்குனிவைத்தானே ஏற் படுத்தும். தேசியளவில் மோடி அரசிற்கு எதிராக உருவாகிவரும் அதிருப்தியைத் திசை திருப்ப கிரிக்கெட்டை வைத்து அரசியல் சித்து விளை யாட்டை மேற்கொள்வது இந்த முறை எடுபடாது.
ஏற்கனவே இமாச்சல், தில்லி, திரிபுரா, நாகா லாந்து, மேகாலயா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் பாஜகவிற்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் இறுதி ஆட்டம். இந்த ஆட்டத்தில் பாஜக கிளீன் போல்ட் ஆவது உறுதி. அதுதான் மதவெறியர்களைத் தனிமைப்படுத்தி இந்தியா பெறும் உண்மையான வெற்றி ஆகும்.