headlines

img

தோல்வி பீதியில் பாஜக

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் எம்பியுமான சிகா மணி ஆகியோரின் வீடுகளிலும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த 2006 முதல் 2011 வரையிலான  திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிமவள மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார்.  அவரது மகன் கவுதம சிகாமணி விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் தனது சொந்த பட்டா நிலத்தில் அரசு அனு மதியுடன் செம்மண் எடுத்தார். ஆனால் அனுமதிக் கப்பட்ட அளவை விட அதிகமாக மண் எடுக்கப் பட்டதாக  2012ஆம் ஆண்டு அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.  ஆனால் இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்பட அனைவரையும் விடுவித்தது.

இந்த வழக்கில் மாநில அரசு மேல் முறையீடு  செய்திருந்தாலும் அதை பொன்முடியும் அவரது மகனும் சட்டப்படி எதிர்கொள்ளத்தான் போகிறார் கள். எதேச்சதிகார பாஜக அரசை வீழ்த்தவேண் டும் என்ற நோக்கத்தோடு கூட்டப்பட்ட எதிர்க்கட்சி களின்  பாட்னா கூட்டம் வெற்றிகரமாக அமைந் தது. அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பாட்னா  கூட்டத்தை விட கூடுதலான கட்சிகள் இந்தகூட்டத்தில்  பங்கேற்றுள்ளதால் பாஜகவை நடுங்க வைத்துள்ளது.

எதிர்க்கட்சிகள் என்றாலே ஊழல் கட்சிகள் என்ற தோற்றத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த முன் னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்களின் வீடுக ளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி யது. வழக்கும் பதிவு செய்தது. ஆனால் அவர்கள் பாஜகவில் சேர்ந்த பின்னர்  வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.  அதேபோல் மகாராஷ்டி ராவில் பாஜக வளைத்துப்போட்டுள்ள அஜித் பவார், காங்கிரஸ்- என்சிபி கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். 2021ல் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது. ஆயிரம் கோடி ருபாய்  மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை. அதே அஜித்பவார் இன்று பாஜக ஆசியுடன் மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வ ராக பதவி ஏற்றுள்ளார். இதுதான் பாஜக.

எனவே வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக  குறித்தும் அதன் ஊழல்கள் குறித்தும் பேச ஏராள மான விஷயங்கள் உள்ளன. ஆனால் எதிர்க் கட்சிகள் மீது பழிபோட எதுவும் தேறாத கார ணத்தால் பழைய வழக்குகளை தூசி தட்டும் வேலையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. தேர்தல் தோல்வி குறித்த பீதி இப்போதே பாஜகவுக்கு தொற்றிக்கொண்டதையே இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

;