headlines

img

நீதிக்குத் தண்டனையா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீப் பானர்ஜி வலுக்கட்டாயமாக மேகாலயா உயர்நீதிமன்றத் திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது நீதித்துறை யிலும், இந்திய அரசின் அத்துமீறிய தலை யீட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது. 

அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உள்பட பல்வேறு வழக்கறிஞர்கள் அமைப்புகள் சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தினர். ஆனால் இது ஏற்கப்படவில்லை. 

கடைக்கோடி மக்களின் கடைசி புகலிடமாக நீதி மன்றங்கள்தான் விளங்குகின்றன. நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்தின் வெளிப்படைத் தன்மை தேவை என்பது பலமுறை வலியுறுத்தப் பட்டுள்ளது. ஆனால் நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. 

வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்த பிரிவு உபச்சார விழாவை புறக்கணித்த சஞ்சீப் பானர்ஜி சக நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்க ளுக்கும் எழுதியுள்ள கடிதம் பல்வேறு கேள்வி களை எழுப்புகிறது. நீதித்துறை ஊழியர்கள் ஆதிக்கக் கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டி ருப்பதாகவும் அதை தம்மால் தகர்த்தெறிய முடிய வில்லை என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார். அவர் கூறியுள்ள ஆதிக்கக் கலாச்சா ரத்தின் காரணமாகவே அவரது இடமாற்றமும் நிகழ்ந்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யாக பதவியேற்ற பத்தே மாதங்களில் அவர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கான பின்னணி என்ன? என்ற கேள்வி எழுகிறது. 75 நீதிபதிகளை கொண்ட மிகப்பெரிய உயர்நீதிமன்றமான சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து இரு நீதிபதி கள் மட்டுமே உள்ள மேகாலயா உயர்நீதிமன் றத்திற்கு சஞ்சீப் பானர்ஜி மாற்றப்பட்டுள்ளார். 

தன்னுடைய பணிக்காலத்தில் கொரோனா வழிகாட்டுதல் உள்பட பல்வேறு வழக்குகளில் ஒன்றிய அரசை அவர் கண்டித்து வந்தார். சுற்றுச்சூழல் தொடர்புடைய வழக்குகளையும் அவர் அரசுக்கெதிராக வலுவான உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். இந்தப் பின்னணியில் அவரது இடமாற்றம் ஒரு தண்டனை என்பது மட்டு மின்றி ஏனைய நீதிபதிகளுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றும் மூத்த வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள் ளனர்.

நேர்மையான நீதிபதிகள் என அறியப்படுப வர்கள்  தூக்கியடிக்கப்படுவது இது முதன்முறை யல்ல, ஸ்டெர்லைட் வழக்கு, எட்டுவழிச்சாலை போன்ற வழக்குகளில் அரசுக்கெதிராக உத்தரவு பிறப்பித்த டி.எஸ்.சிவஞானம் கொல்கத்தா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டார். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கே, தஹில் ரமானி மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அவர் பதவியேற்காமல் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதித்துறை யின் நம்பகத்தன்மையும், வெளிப்படைத் தன்மை யும் கேள்விக்குள்ளாக்கப்படுவது நீதியன்று. 

ஒன்றிய அரசை அனுசரித்துச் செல்பவர்க ளுக்கு ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகள் பரிசாக வழங்கப்படும் பின்னணியில் சிலர் குறி வைத்து தண்டிக்கப்படுவது நீதித்துறைக்கு நல்லதல்ல.  

;